சொகுசு சேவை மேலாண்மை | Kalvimalar - News

சொகுசு சேவை மேலாண்மை

எழுத்தின் அளவு :

பல்வேறான பொருளாதார மந்தநிலை சூழல்களுக்கு மத்தியிலும், சொகுசு சேவை துறையானது, தனது முக்கியத்துவத்தை இழக்காமல், தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது. வேலை வாய்ப்புகள் இத்துறையில் அதிகரித்த வண்ணம் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சொகுசு சேவைத் துறையில் 200 பில்லியன் டாலர்களுக்கு(இந்திய மதிப்பில் 2 லட்சம் கோடி) வர்த்தகம் நடைபெறுகிறது. குறிப்பாக ஆசியா - பசிபிக் நாடுகளில் இத்துறையின் வளர்ச்சி குறிப்பிட்டு சொல்லும் வகையில் இருக்கிறது.

சொகுசு சேவைத் துறையில்(Luxury field) சாதிக்க பிரதான தகுதி ஒருவரின் ஆர்வமே. அதை உங்களின் கொள்கையாக பாவித்துக் கொள்ளவும். பொருட்களைப் பற்றிய தெளிவான புரிந்துணர்வை வளர்த்துக்கொண்டு, உங்களுக்கான சரியான பணிப் பிரிவு மற்றும் பணி நிலையை(fashion, real estate, travel etc.,) முடிவுசெய்துகொண்டு, அதன்பிறகு, உங்களின் தொழில் பிரிவுக்கேற்ற வகையில், இயல்பார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வழிவகைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்துறையிலுள்ள சில பணி வாய்ப்புகள்

சில்லறை வணிகம்

பலரும் இத்துறையில் வாய்ப்புகளை விரும்புகிறார்கள். ஸ்டோர் மேலாளர், உதவி ஸ்டோர் மேலாளர் மற்றும் ஸ்டாக்கிஸ்ட்.

தயாரிப்பு மற்றும் உரிமங்கள்

ப்ராடக்ட் மேனேஜர், பிரான்ட் மேனேஜ்மென்ட் மற்றும் வணிகர்.

தகவல் தொடர்புகள்

பொதுமக்கள் தொடர்பு,  ஈவெனட் மேலாண்மை, விளம்பரம் மற்றும் மீடியா பிளானிங்.

படைப்புத் திறன்

சொகுசு சேவைத் துறை என்பது, வணிகத்திறன் என்பதோடு சேர்த்து, படைப்பாக்க திறனும் தேவைப்படும் ஒரு தொழிலாகும். இத்துறையில் அதிகளவிலான எம்.பி.ஏ., மாணவர்கள் விரும்பி ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேசமயம், இத்துறையானது, கன்சல்டிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் துறைகளைப் போன்று நன்கு கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதாக நினைத்துக் கொள்ளக்கூடாது. பத்தாண்டுகளுக்கு முன்னால், இன்று நீங்கள் பார்க்கும் பெரிய பெரிய சொகுசு சேவைத் துறை அமைப்புகள் எல்லாம், சிறியளவிலான வணிக அமைப்புகளாகவே இருந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, முன்னதாகவே தொடங்குவது நன்மை பயக்கும். சிறப்பான அனுபவம் பெற்றவர்கள், இத்தொழிலில் நன்கு சாதிக்கலாம். சொகுசு சேவை தொழில்துறை என்பது எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்டது. இந்த திருப்பம், விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையில் ஏற்படும் திருப்பங்களைவிட பெரியது.

உதாரணமாக கூறவேண்டுமானால், ஒருவர் ஒரு சாதாரண குடையை சில டாலர்கள் விலையில் வாங்குவார். அதேசமயம், அவர், சேனல் குடையை சில ஆயிரம் டாலர்கள்கூட செலவழித்து வாங்குவார். இதுதான் சொகுசு சேவைத் துறையில் ஏற்படும் அதிரடி திருப்பங்கள். எனவே, இவற்றை நீங்கள் புரிந்துகொண்டால், இத்துறையில் நீண்ட வெற்றியாளராய் இருக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us