என் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது எம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா? | Kalvimalar - News

என் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது எம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா?ஏப்ரல் 23,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

நேஷனல் பிசிகல் லெபாரட்டரியானது, அறிவியல் பட்டதாரிகளை, குறிப்பாக, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த பட்டம் பெற்றவர்களை பணிக்கு அமர்த்துகிறது. உங்களுக்கு, கணிப்பொறி அறிவியலில் ஆர்வமிருந்தால், சென்னையிலுள்ள கணிதவியல் கல்வி நிறுவனம், பெங்களூரிலுள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் அல்லது மும்பையிலுள்ள அடிப்படை அறிவியலுக்கான டாடா கல்வி நிறுவனம் போன்றவை சிறந்தவை.

இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு, அணுஆற்றல் துறை, டி.ஆர்.டி.ஓ., போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும், ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட் மற்றும் ஜி.இ., போன்ற நிறுவனங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, இதற்கு ஏற்றாற்போல், உங்களின் திட்டங்களை வகுத்துக்கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us