பேஷன் துறை | Kalvimalar - News

பேஷன் துறை

எழுத்தின் அளவு :

பேஷன் துறையில் பணியாற்றும் நபர்களுக்கான மரியாதையே இன்றைய நிலையில் தனி. ஒன்றின் தோற்றத்தை கவரும் விதமாக மாற்றுதல், பேட்டர்ன்கள், கம்பளி, நூல் மற்றும் வண்ணங்களின் மூலமாக ஒரு நபரையோ அல்லது ஒரு பொருளையோ அழகு செய்தலென்பது அனைவராலும் முடியாது.

பேஷன் தொழில்துறை என்பது இன்றைய நிலையில், உலகின் பிரதான தொழில்துறைகளுள் ஒன்றாக இருக்கிறது. ஆனால், பத்தாண்டுகளுக்கு முன் நிலைமை இவ்வாறு இல்லை. ஒரு மாணவர், தன் பெற்றோரிடம், பள்ளிப் படிப்பிற்கு பிறகு, பேஷன் துறை படிப்பை மேற்கொள்ளப் போகிறேன் என்று கூறினால், அவர்களுக்கு கோபம் வரும்.

தங்களின் பிள்ளை ஏதோவொரு தெரியாத, வேலை வாய்ப்பே இல்லாத, பிரயோஜனமற்ற துறையை தேர்வுசெய்து விட்டதாய் அவர்கள் பதறுவார்கள். ஆனால், இன்று நிலைமையே வேறு. இந்தியாவில் அத்துறை நன்கு வளர்ச்சியடைந்திருப்பதோடு, அனைவரிடமும் விழிப்புணர்வும் பெருகியுள்ளது.

மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க வேண்டும். இல்லையேல், சட்டம் அல்லது ஆசிரியர் படிப்பாவது படிக்கட்டும். அப்போதுதான் வாழ்வை நகர்த்த முடியும் என்ற நிர்ப்பந்தம் மாணவர்கள் மீது முன்பெல்லாம் திணிக்கப்படும். அவர்களும், பெரிய எதிர்ப்புகள் ஏதுமின்றி, பெற்றோர் மற்றும் உற்றாரின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து விடுவார்கள். ஆனால், இன்று தங்களுக்கு எது தேவை என்பதை தைரியமாக தேர்வு செய்து, அதை பிடிவாதமாக கேட்டுப் பெறும் மனோதிடம் புதிய தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

நடைமுறை அனுபவம் அல்லது தியரி அறிவு

பேஷன் துறையின் பிரதான அம்சம் படைப்புத் திறனாக இருந்தாலும், இத்துறை படிப்பு, முற்றிலும் அது சார்ந்தது மட்டுமே அல்ல. தியரி மற்றும் பிராக்டிகல் ஆகிய இரண்டு அம்சங்களும் சேர்ந்ததுதான் இப்படிப்பு.

பல்வேறான கல்வி நிறுவனங்களால் இப்படிப்பு வழங்கப்படுகிறது. அவை, என்.ஐ.எப்.டி., பியர்ல் அகடமி ஆப் பேஷன், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன், இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டிசைன் உள்ளிட்டவை அவற்றுள் அடக்கம்.

பிராக்டிகல் அறிவு மற்றும் தியரி அறிவு ஆகிய இரண்டு அம்சங்களின் கலவையும் இத்துறையில் சாதிப்பதற்கான முக்கிய அம்சங்கள். பேஷன் துறையில் வழக்கமான முறையிலான கல்வியானது, படைப்பாக்கத் திறனைப் பெறுவதற்கு உதவுகிறது. எனவே, தியரி அறிவை சோதிக்க தேர்வுகளும், பிராக்டிகல் அறிவை மேம்படுத்த, ப்ராஜெக்ட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று சில கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், தேர்வுகள் என்பவை படைப்பாக்கத் திறனை தடை செய்பவை மற்றும் ப்ராஜெக்ட் அடிப்படையிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கற்றுக் கொண்டே செயல்படுதல் என்பதுதான் இத்துறையில் அதிக அனுபவத்தைப் பெற உதவும் என்று சில கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முறைசார்ந்த கல்வியானது, மாணவர்களுக்கு நிறைய அறிவைத் தருகிறது. இதன்மூலம் சிந்தனை செம்மையடைகிறது. இதன்மூலம் நமது அறிவை வகைப்படுத்தி, மேம்படுத்தி, அதன்மூலம் ஒருவரின் வெற்றிக்குத் தேவையான உத்வேகத்தைப் பெற முடியும். மேலும், தியரி அறிவும், பிராக்டிகல் அறிவும் தனித்தியங்கும் தன்மை வாய்ந்தவை. எனவே, ஒரு பேஷன் மாணவர், இந்த இரண்டையும் பெறாமல் வெற்றி பெறுவது எளிதல்ல.

ஒருவர், பேஷன் துறையில் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றுவிட்டாலே, அவர் அத்துறையில் சாதிப்பதற்கான அனைத்து தகுதிகள் மற்றும் திறமைகளைப் பெற்றுவிட்டார் என்று அர்த்தமல்ல. அதேபோன்று, வெளிநாட்டிற்கு சென்று பேஷன் படிப்பு முடித்துவரும் ஒரு நபரும், அத்தொழிலுக்கான அனைத்து அம்சங்களிலும் தேர்ந்த நபராக இருப்பார் என்பதை உறுதிசெய்ய முடியாது.

பேஷன் படிப்பை வழங்கும் ஒரு கல்லூரியை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், அங்கே அத்துறைக்கு மிகவும் பொருத்தமான மற்றும் ஓரளவிற்கு பொருத்தமான மற்றும் மிகவும் சுமாரான மாணவர்கள் என்று பல வகையினர் இருப்பார்கள்.

பணி வாய்ப்புகள்

ஒருவர் பொறியியல் அல்லது கட்டடக் கலை படித்தால், அவருக்கு ஒரு நிறுவனத்தில் பணி கிடைக்கும். ஆனால், பேஷன் துறையில் பட்டம் பெற்றவரை, இதே நிலையில் இருத்திப் பார்ப்பது கடினம்.

இத்துறையில் ஒருவருக்கு தனித்தன்மை அவசியம். அப்போதுதான் தனக்கான ஒரு சிறந்த பணி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வெற்றிபெற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us