பொருளாதார நிபுணர் என்பவர் யார்? | Kalvimalar - News

பொருளாதார நிபுணர் என்பவர் யார்?

எழுத்தின் அளவு :

கடந்த 1700ம் ஆண்டுகளில், பொருளாதாரம் என்பது வெறுமனே நாடுகளின் செல்வம் பற்றி படிப்பது என்ற நிலையிலிருந்து, பல படிகளை கடந்து வந்துள்ளது. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம்ஸ்மித் அவ்வாறு கருதினார்.

பொருளாதாரத்தின் உலகம்

பொருளாதாரம் என்பது பாரம்பரிய ரீதியாக, மைக்ரோ அல்லது மேக்ரோ என்று வகைப்படுத்தப்படுகிறது. மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது, கூட்டுத்திரள் தொகுப்பு நிலையிலான நடத்தையுடன் தொடர்புடையது.

இந்த நிலையில், பொருளாதார வல்லுநர்கள், ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக, வளர்ச்சி, விரிவாக்கம், இணைப்பு மற்றும் ஈட்டுதல் வாய்ப்பு ஆகியவை குறித்து மதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்கிறார்கள்.

அதேசமயம், மேக்ரோ எகனாமிக்ஸ் என்பது, பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக ஆய்கிறது. ஒரு நாட்டின் வரவு மற்றும் உற்பத்தி, அதன் வேலைவாய்ப்பு விகிதம், பணவீக்கம், செலவு போன்ற விவகாரங்கள், மேக்ரோ எகனாமிக்ஸ் வகையின் கீழூ வருபவை.
இவை இரண்டையும் தாண்டி, டெவலப்மென்டல் எகனாமிக்ஸ் என்ற பிரிவு, சமீப ஆண்டுகளில் பிரபலமடைந்து வருகிறது. பொருளாதார நிபுணர்கள் என்பவர்கள், என்.ஜி.ஓ.,க்கள், ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய தரவுகளை சேகரித்தல், அந்த விஷயத்தைப் பற்றிய மனப்போக்கை ஆய்வுசெய்து ஒரு தீர்வை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக, பொருளாதார நிபுணர்கள், மேற்கண்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

ஒரு பொருளாதார நிபுணராக உருவாதல்

பொருளாதார நிபுணர்கள், பொதுவாக, பொருளாதாரம் அல்லது துணைநிலை பொருளாதாரம் அல்லது சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றவராக இருப்பார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஒருவர், எகனோமெட்ரிக்ஸ், மேக்ரோஎகனாமிக்ஸ் அல்லது மேக்ரோஎகனாமிக்ஸ் ஆகிய ஏதேனும் ஒன்றில் ஸ்பெஷலைஸ் செய்திருக்கலாம். அதேசமயம், வெளிநாட்டில், இன்டஸ்ட்ரியல் எகனாமிக்ஸ், கேம் தியரி, அப்ளைடு எகனாமிக்ஸ், பைனான்சியல் எகனாமிக்ஸ் மற்றும் சர்வதேச வணிகம் போன்ற ஸ்பெஷலைசேஷன்கள் பிரபலம்.

ஏன் பொருளாதார படிப்பை தேர்வுசெய்ய வேண்டும்?

ஒரு பாடமாக, பொருளாதாரம் என்பது சர்வதேச பயன்பாடு கொண்டது.

பொருளாதார வல்லுநர்கள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள். அவர்கள், உலக விவகாரங்கள் குறித்து up-to-date நிலையில் இருக்க வேண்டும்.

பொருளாதார நிபுணர்கள், ஒரு நல்ல நிதி திட்டமிடுநர்களாகவும் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில்...

எகனாமிக் படிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள், அத்துறையில் சாதிக்க, அதிகமாக படிப்பது அவசியம். அது மாணவராக இருக்கும்போதும் சரி, அந்த காலகட்டத்தை கடந்துவிட்டபிறகும் சரி.

பொருளாதாரப் படிப்பு என்பது, உயர்நிலைக் கல்வி அளவில் அதிகம் கணிதம் தொடர்பானது. எனவே, எண்கள் மீது ஆர்வம் இல்லாதவர்கள், இப்படிப்பை அனுபவிக்க முடியாது.

இத்துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்கள், தங்களின் முதல் பணி வாய்ப்பை பெறுவது சற்று கடினமாக காரியம்தான். ஏனெனில், இத்துறையின் பட்டதாரி, தன்னை ஒரு தொழில் நிபுணராக மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

பணி நேரங்கள் சில சமயங்களில் மிக அதிகமாக இருக்கும். மேலும், இந்த வகைப் பணியானது, வெறுமனே அலுவலகத்தில் இருப்பது மட்டுமாகாது. மாறாக, பயணம் செய்தல் மற்றும் களப் பணி ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்கலாம்.

இந்தியாவிலுள்ள சவால்கள்

இந்தியாவில் இத்துறை தொடர்பான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால், ஒருவர் தனக்கான நல்ல பணியைப் பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஒவ்வொரு நிறுவனத்திற்கு பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், குறைவான எணணிக்கையில் மட்டுமே.

மேலும், எகனாமிஸ்ட்டுகளை பணிக்கு அமர்த்துவதென்பது சீனன் தொடர்பானதல்ல. அதாவது, ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அதிக நபர்களை பணிக்கு அமர்த்துவது போன்றதல்ல இது. எப்போது தேவை இருக்கிறதோ, அப்போது மட்டுமே எகனாமிஸ்ட்டுகள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் தருணத்தில், சிறந்த பொருளாதார நிபுணரின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது.

உங்களிடம் இருக்கும் கணிதத் திறமையை, உங்களின் சமூக அறிவுடன் ஒருங்கிணைத்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உங்களால் திறம்பட பங்களிப்பு செய்ய முடிந்தால், சமூகம் உங்களைப் போற்றும்.

எகனாமிஸ்ட் பணி

தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் போன்றவை, எப்படி பலவிதமான வளங்களைப் பயன்படுத்தி, தங்களின் இலக்குகளை அடைகின்றன மற்றும் பொருளாதார திட்டங்களை எப்படி செயல்படுத்துகின்றன என்பதை ஒரு எகனாமிஸ்ட் ஆய்வு செய்கிறார்.
அந்த வளங்கள் என்பவை, சாதாரண நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள்(துணி மற்றும் பற்பசை) முதற்கொண்டு, நிதிசார்ந்த அம்சங்கள்(பணம் உள்ளிட்டவை) வரை அடங்கும்.

மேலும், தற்போதைய நடப்பு நிகழ்வுகளைக் கொண்டு, எதிர்கால சூழல் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஒரு எகனாமிஸ்ட் மதிப்பிடுவார்.

வருமானம்

முதுநிலை பொருளாதார பட்டப்படிப்பு முடித்த ஒருவர், ஆரம்ப நிலையில், ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானமாக எதிர்பார்க்கலாம். அனுபவம் அதிகரிக்கும்போது, வருமானமும் அதிகரிக்கும்.

எகனாமிஸ்ட்டுகளுக்கான பணி வாய்ப்பு துறைகள்

வங்கியியல்
பைனான்ஸ்
அக்கவுன்டன்சி
மார்க்கெட்டிங்
வர்த்தகம்
அரசியல்
நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள்
அரசாங்கம்
தேவையான திறன்கள்
கூர்மையான பகுப்பாய்வு மற்றும் கணித திறன்கள், சிறப்பான கவனம் மற்றும் ஆர்வம் இருப்பதோடு, நிறைய படிக்கக்கூடிய மனப்பக்குவமும் இருக்க வேண்டும்.

பொருளாதார படிப்பிற்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள்

தேசிய மற்றும் சர்வதேச கல்வி நிறுவனங்கள்
செயின்ட் ஸ்டீபன் காலேஜ் - டில்லி
நார்சி மோன்ஜே காலேஜ் ஆப் காமர்ஸ் அன்ட் எகனாமிக்ஸ் - மும்பை
எத்திராஜ் காலேஜ் - சென்னை
லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் - பிரிட்டன்
ஹாவர்டு பல்கலைக்கழகம் - அமெரிக்கா.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us