கூட்டுறவு மேலாண்மைத் துறை பற்றிய தகவல்களைத் தரவும். இது வேலை வாய்ப்பு தரக்கூடிய துறை தானா? | Kalvimalar - News

கூட்டுறவு மேலாண்மைத் துறை பற்றிய தகவல்களைத் தரவும். இது வேலை வாய்ப்பு தரக்கூடிய துறை தானா?நவம்பர் 05,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத் தேவைகளைப் பொதுவாகக் கொண்ட மனிதர்கள் கூட்டாக இணைந்து தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஜனநாயக ரீதியில் செயல்படுவதை கூட்டுறவுக் குழு எனக் கூறுகிறோம். கூட்டுறவுக் குழுக்களுக்கென்று நிச்சயமான மற்றும் தனித்துவமான அம்சங்கள் உள்ளன.

முதலாவதாக இதன் அங்கத்தினர்களுக்கு ஒரே மாதிரியான பொருளாதார, கலாச்சாரப் பின்னணி இருக்க வேண்டும். அடுத்ததாக இது தன்னாட்சித்துவம் பெற்று ஜனநாயக மதிப்பீடுகளுடன் இயங்க வேண்டும். தற்போது எல்லாத் துறைகளிலுமே கூட்டுறவு என்பது இருக்கிறது. கூட்டுறவின் வாயிலாக எந்தவொரு துறையிலும் நல்ல வருவாய் கிடைப்பதும் அனுபவபூர்வமான உண்மையாக உள்ளது. கூட்டுறவில் உள்ள அனைவருக்கும் முதலாளித்துவம் இருப்பதால் நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் தான் கூட்டுறவு மேலாண்மை என்ற துறைக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களும் இத் துறையில் இணைவதைப் பெரிதும் விரும்புகின்றனர். சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவின் கிராமங்களிலும் மூலை முடுக்குகளிலும் தங்களுடைய கிளைகளைத் தொடங்க முயன்று வரும் நிலையில் கூட்டுறவு மேலாண்மையில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் சிறந்த எதிர்காலம் உருவாகும் வாய்ப்பு அதிமாகவே உள்ளது.

கூட்டுறவு மேலாண்மையைப் படிக்க நுழைவுத் தேர்வு உள்ளது. இதன் பின் குழு விவாதம், நேர்காணல் என்ற நிலைகள் உள்ளன. இந்த நுழைவுத் தேர்வினை அனைத்துத் துறையினரும் எழுதலாம் என்ற போதும் கலைப் பிரிவு படித்தவர்கள் இதில் அதிகம் நுழைகின்றனர். இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றுத் தேறியிருப்பது இத் துறையில் இணைவதற்கு உதவிடும்.

தற்போது அதிகரித்து வரும் உலகமயமாக்கலால் இந்தியாவிலுள்ள கிராமங்கள் மற்றும் குறுநகரங்களை நோக்கி சர்வதேச நிறுவனங்கள் நகருகின்றன. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதுடன் கூட்டு-றவு மேலாண்மை படித்தவர்களுக்கு தனியார் மற்றும் அரசுத் துறைகளில் சிறப்பான பணி வாய்ப்பு கிடைக்கிறது.
கூட்டுறவு மேலாண்மைத் துறையில் பயிற்சியாளராக இணையும் ஒருவர் மாதம் ரூ.6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பெறுகிறார்.

அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க சிறப்பான வருவாயைப் பெற முடிகிறது. துறை தொடர்பான சில தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் பெயர்களைத் தருகிறோம்.

தரப்படும் படிப்பின் பெயர்:

Post-Graduate Programme in Rural Management (PRM),

Institute of Rural Management,

Anand, Post Box No: 60,

Anand - 388 001, Gujarat

Website : www.irma.ac.in

 தரப்படும் படிப்பின் பெயர்:

Higher Diploma in Co-operative Management (HDCM)

Institute of Cooperative Management,

Bhopal (under National Council for Co-operative Training (NCCT), New Delhi)

E-8/77, Trilanga Road, Shahpura, Bhopal

Pin-462039 (M.P.)

Website : www.icmbpl.nic.in

தரப்படும் படிப்பின் பெயர்:

Post Graduate Diploma in Co-operative Business management (DCBM)

Vaikunth Mehta National Institute of Cooperative Management, Pune

National Institute of Co-operative Management

University Road, Pune - 411 007, India

Phone : Office Hrs. 020-25537974-78

Website : www.vamnicom.org

தரப்படும் படிப்பின் பெயர்:

MBA in cooperative management, Regional Institute of Cooperative Management Bangalore (RICMB),

67, Padmanabhanagar,

BSK II Stage, Bangalore, Karnataka,

Website : www.ricmbangalore.com

தரப்படும் படிப்பின் பெயர்:

MBA course in cooperative management

Madhusudhan Institute of Co-operative Management (ICM), Bhubaneswar provides a two year .

Madhusudhan Institute of Co-operative Management (ICM), Bhubaneswar

Unit-VIII, Bhubaneswar-751012

Website : www.icmbhubaneswar.nic.in

தரப்படும் படிப்பின் பெயர்:

Xavier Institute of Social Service

Xavier Institute of Social Service

Post Box No. 7, Purulia Road

Ranchi, Jharkhand - 834 001, INDIA

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us