என் பெயர் பிரதீபா; இளநிலை வேதியியல் இறுதியாண்டு படிக்கிறேன். இதன்பிறகு, நான் அனலிடிகல் கெமிஸ்ட்ரி(பகுப்பாய்வு வேதியியல்) படிக்க விரும்புகிறேன். எனவே, இந்தப் படிப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறை தெரிவிக்கவும். எந்தெந்த கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்குகின்றன மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன? | Kalvimalar - News

என் பெயர் பிரதீபா; இளநிலை வேதியியல் இறுதியாண்டு படிக்கிறேன். இதன்பிறகு, நான் அனலிடிகல் கெமிஸ்ட்ரி(பகுப்பாய்வு வேதியியல்) படிக்க விரும்புகிறேன். எனவே, இந்தப் படிப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறை தெரிவிக்கவும். எந்தெந்த கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்குகின்றன மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன?ஜனவரி 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

வேதியியல் என்பது ஒரு அம்சத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் உள்ளடக்கம் பற்றிய தகவலை தெரிவிப்பது, செயல்படுத்துவது மற்றும் பெறுவது ஆகியவற்றின் அறிவியல் செயல்பாடேயாகும். மேலும், ஒரு அம்சம் எப்படியானது மற்றும் அதன் இருப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கலை மற்றும் அறிவியல் செயல்பாடு வேதியியல் ஆகும்.

ஒரு வேதியியல் பகுப்பாய்வாளர் என்பவர், தரமான மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய ஆய்வை மேற்கொள்கிறார். இந்த செயல்பாட்டில் அவர், மாதிரியெடுத்தல், நிர்ணயித்தல், தனிப்படுத்தல், கவனித்தல், மாதிரிகளை பாதுகாத்தல், பிழை வரம்பை நிர்ணயித்தல், நுட்பம் மற்றும் தரப்படுத்தல் மூலமாக முடிவுகளை மதிப்பிடுவது மற்றும் உறுதிசெய்வது, வேறுபட்ட வேதிப் பண்புகளின் மூலமாக பொருட்களைப் பிரித்தல், அளவிடுவதற்கு புதிய வழிகளை உருவாக்குதல், பொருத்தமான சூழலில் தரவை விளக்குதல் மற்றும் தகவல்களை பரிமாறுதல் போன்ற பலவிதமான பணிகளை மேற்கொள்கிறார்.

வேதியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலுமுள்ள சிக்கல்களைத் தீர்க்க, அந்த பகுப்பாய்வாளர்கள், அவர்களின், வேதியியல் அறிவு, உபகரண அறிவு, கணினி அறிவு மற்றும் புள்ளியியல் அறிவு போன்ற பல அம்சங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

பகுப்பாய்வு வேதியியல் தமிழகத்தில், கீழ்வரும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன,

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னையிலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள(அட்டயம்பட்டி) மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us