போட்டோனிக்ஸ் - இயற்பியலின் ஒரு துணை பிரிவு | Kalvimalar - News

போட்டோனிக்ஸ் - இயற்பியலின் ஒரு துணை பிரிவு

எழுத்தின் அளவு :

போட்டோனிக்ஸ் என்பது இயற்பியலின் ஒரு துணை பிரிவாகும். போட்டோன்ஸ் போன்ற துகள்களை, உருவாக்குதல், கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான அறிவியலே போட்டோனிக்ஸ் எனப்படுகிறது.

இமேஜிங், ஹெல்த்கேர், மருத்துவம், பாதுகாப்பு, ஆப்டிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில், போட்டோனிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுவதால், இதுவொரு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மதிக்கப்படுகிறது.

ஆற்றல் உருவாக்கம், கண்டறிதல், தகவல்தொடர்பு மற்றும் தகவல் செயல்பாடு ஆகிய பல்வேறு துறைகளில் இதன் பயன்பாடு பரந்து விரிந்து செல்கிறது.

உலகளாவிய தேவை

போட்டோனிக்ஸ் துறையில் முறையான கல்வி பயின்றவர்களுக்கான தேவை உலகளவில் அதிகம் உள்ளது. ஒருவரின் கல்வித் தகுதியைப் பொறுத்து, அவர், ஆராய்ச்சி இயக்குநராகவோ அல்லது துணை முதன்மை பொறியாளராகவோ பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

இத்துறை நிபுணர்களுக்கு, டெலிகம்யூனிகேஷன் நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. ஆப்டிகல் தொடர்பான பொருட்கள் மற்றும் சிஸ்டம்களை சப்ளை செய்யும் நிறுவனங்களில், வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் போட்டோனிக்ஸ் அம்சங்களை சோதனை செய்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ள நபர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

இத்துறை தொடர்பான படிப்புகளை எங்கே மேற்கொள்ளலாம்?

* போட்டோனிக்ஸ் சர்வதேச கல்வி நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கொச்சின் பல்கலைக்கழகம், கொச்சின்.
* ஐ.ஐ.டி., சென்னை
* மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மணிப்பால்
* ஐ.ஐ.டி., டில்லி
* பெரியார் ஈ.வெ.ரா., கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
* ராஜரிஷி சாகு மகாவித்யாலயா, போட்டோனிக்ஸ் துறை, லத்தூர்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us