இவர்தான் ஒரு நல்ல லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்! | Kalvimalar - News

இவர்தான் ஒரு நல்ல லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்!

எழுத்தின் அளவு :

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் என்பவர், ஒரு இட அமைப்பையோ, தோட்டத்தையோ அல்லது  ஏதேனும் ஒரு தனிப்பயன் இடத்தையோ உருவாக்குவதற்கு திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் இயக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

இதுதொடர்பான ஒரு தொழில்முறை செயல்பாடு லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர் எனப்படுகிறது.

அதேசமயம், லேன்ட்ஸ்கேப் டிசைனர் என்ற ஒரு வார்த்தையும் உள்ளது. அதாவது, Landscape architect -ஆக செயல்படுவதற்கு சரியான அங்கீகாரமோ அல்லது உரிமமோ(licence) பெறாதவர்கள், Landscape designer என்று அழைக்கப்படுகிறார்கள்.

மேலும், Landscape architecture தொழிலில் ஈடுபடுவதற்கான முறையான அங்கீகாரத்தை இன்னும் பெறாதவர்கள், தங்களை, தோட்டக் கலைஞர்கள், செடி உருவாக்க வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் வடிவமைப்பாளர்கள் அல்லது பயன்பாட்டு இடவமைப்பு திட்டமிடுநர்கள் என்ற பல்வேறு பெயர்களில் அழைத்துக் கொள்கிறார்கள்.

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்டின் பணி என்ன?

ஒரு குறிப்பிட்ட தோட்டமாக இருந்தாலும்சரி, குறிப்பிட்ட பயன்பாட்டு இடஅமைப்பாக இருந்தாலும் சரி, லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட், படைப்பாக்க அறிவைப் பெற்றவராக இருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில், ஒரு பயன்பாட்டு இடவமைப்பு(landscape) எவ்வாறு காட்சித்தர வேண்டும் மற்றும் எதிர்வரும் காலங்களில், அந்த பயன்பாட்டு இடவமைப்பு எவ்வாறு மேம்பட்டு, மாற்றமடைய வேண்டும் என்பது குறித்தான நடவடிக்கைகளை அவர் கையாள்கிறார்.
இதுதொடர்பான திட்டமிடுதல்கள், வடிவமைப்புகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்தான் முடிவு செய்கிறார்.

பொறுப்புகள் மற்றும் பணிகள்

* புராஜெக்ட் பற்றி வாடிக்கையாளரிடம் உரையாடுதல்

* பணி மேற்கொள்ளப்படக்கூடிய பகுதியில் இருக்கின்ற இயற்கை வளங்கள், அம்சங்கள், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றை கண்டறிதல்

* திட்டங்களை உருவாக்க, CAD போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்

* மக்கள் குழுவினருக்கான அறிக்கை எழுதுதல் மற்றும் பிரசன்டேஷன்களை அளித்தல்

* திட்டங்களுக்கான செலவினங்களை மதிப்பிட்டு, அதை மேற்பார்வையிடல்

* ஒரு பயன்பாட்டு இடவமைப்பிற்கு பொருத்தமான மற்றும் தேவையான மரங்கள், செடிகள் மற்றும் அழகு தாவரங்கள் ஆகியவற்றை தேர்வு செய்தல்

* ஒரு பயன்பாட்டு இடவமைப்பிற்கு, மாற்றுத் திறனாளிகள் போன்ற மனிதர்கள் எந்தளவிற்கு எளிதாக வந்துசெல்ல முடியும் என்பது குறித்தான அம்சங்களை உறுதிசெய்தல்

* ஒரு பயன்பாட்டு இடவமைப்பை(landscape) ஏற்படுத்துவதற்கான செலவினங்கள், அப்பணி முடிந்தபிறகு, பராமரிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விபரங்களை, வாடிக்கையாளர்களுக்கு, கவுன்சில் கமிட்டிகளுக்கு, உள்ளூர் மக்களுக்கு மற்றும் பொது விசாரணைகளில் சமர்ப்பித்தல்.

விரிவான தயாரிப்பு மற்றும் மேற்பார்வை

ஒரு பயன்பாட்டு இடவமைப்பை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்கான செலவு மதிப்பீடு மற்றும் உருவாக்கத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தையும் முடிவுசெய்து, வாடிக்கையாளரிடம் விபரம் சமர்ப்பித்து, பணிகளை தொடங்கிய பிறகு, தேவையான சமயங்களில் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று, திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறதா என்று உறுதிசெய்ய வேண்டும்.

இப்பணிக்கு தேவைப்படும் திறன்கள்

* பல்வேறான விருப்பங்கள் மற்றும் தேவைகளை கருத்தில்கொண்டு, ஒரு புதிய தீர்வை கண்டுபிடிக்கும் திறன்
* நல்ல தகவல்தொடர்பு திறன்
* நல்ல வடிவமைப்புத் திறன்
* சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிவில் இன்ஜினியரிங், சர்வேயிங், மண்ணியல், தோட்டக்கலை மற்றும் புவி நகர்வு நுட்பங்கள் ஆகியவைப் பற்றி தேவையான அறிவுத்திறன்
* நல்ல பேரம் பேசும் திறன்
* நல்ல குழுப்பணித் திறன்
* நல்ல கணிப்பொறித் திறன்
* வெளிப்பார்வை இடவமைப்பை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய ஆர்வம்

இத்துறையில் நுழைதல்

பெரும்பாலான லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்டுகள், லேன்ட்ஸ்கேப் கல்வி நிறுவனத்தால் (LI - Landscape Institute) அங்கீகரிக்கப்பட்ட இளநிலை அல்லது முதுநிலை பட்டத் தகுதியைக் கொண்டிருக்கிறார்கள்.

படிப்பை நிறைவுசெய்த பின்னர், LI -ல் அசோசியேட் உறுப்பினராக ஆகலாம். அதேசமயம், இதில் உறுப்பினராகும் ஒரு முதிர்ந்த உறுப்பினருக்கு, கட்டடக்கலை, தோட்டக்கலை மற்றும் வனவளம் ஆகிய துறைகளில் பெற்றிருக்கும் அனுபவம் மதிப்புத் தருவதாக அமையும்.

அசோசியேட் உறுப்பினர் ஆனவுடன், chartered landscape architect என்ற நிலையை அடைய, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஆனால், அந்த நிலையை அடைந்த ஒருவர், தனது துறைசார்ந்த அறிவை இடைவிடாமல் மேம்படுத்திக் கொள்ள, CPD எனப்படும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் ஆவதற்கு எங்கே படிக்கலாம்?

ஸ்கூல் ஆப் பிளானிங் அன்ட் ஆர்கிடெக்சர்
சண்டிகர் காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர்
சர் ஜே.ஜே. காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர்
பெங்கால் பொறியியல் கல்லூரி
ஜாதவ்பூர் பல்கலை
டி.வி.பி. ஸ்கூல் ஆப் ஹேபிடட் ஸ்டடீஸ்
ஐ.ஐ.டி., காரக்பூர்
ஐ.ஐ.டி., ரூர்கி
சென்டர் பார் என்விரான்மென்டல் பிளானிங் மற்றும் தொழில்நுட்பம்
ராய் பல்கலை, ராய்ப்பூர்

படிப்பு விபரங்கள்

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர்
பிளான்ட்ஸ் அன்ட் டிசைன்
நேச்சுரல் சயின்சஸ்
லேன்ட்ஸ்கேப் டெக்னாலஜி I
லேன்ட்ஸ்கேப் டிசைன் ஸ்டுடியோ I
செமஸ்டர் II
தியரி ஆப் லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர் II
ரீஜினல் லேன்ட்ஸ்கேப் பிளானிங்
லேன்ட்ஸ்கேப் டெக்னாலஜி II
லேன்ட்ஸ்கேப் புரபஷனல் பிராக்டிஸ்
லேன்ட்ஸ்கேப் டிசைன் ஸ்டுடியோ II
செமஸ்டர் III
ரிசர்ச் பேப்பர்
லேன்ட்ஸ்கேப் மேனேஜ்மென்ட்
லேன்ட்ஸ்கேப் டிசைன் ஸ்டுடியோ III
செமஸ்டர் I
லேன்ட்ஸ்கேப் கன்சர்வேஷன்
என்விரான்மென்டல் லெஜிஸ்லேஷன் அன்ட் எகனாமிக்ஸ்
டிசர்டேஷன்
புரபஷனல் டிரெய்னிங்

எதிர்கால வாய்ப்புகள்

நன்றாக யோசித்து, ஒரு தெளிவான நோக்கத்துடன் தேர்வு செய்யப்படும் எந்த துறையும், ஒருவருக்கு நிச்சயம் வெற்றியையே தரும். லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு என்பது அனைவருக்குமே ஒத்துவரக்கூடிய துறையாக இருக்க முடியாது.

இத்துறை தொடர்பான நல்ல அகப்பார்வை மற்றும் திறன் கொண்டவர்களே, இதில் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள். சுற்றுச்சூழல் கெடாத வகையிலும், மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையிலும், ஒருவர் தனது படைப்பாற்றலை பயன்படுத்தி, லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு என்பது பார்ப்பவரை கவரும் வகையில் அமைதல் முக்கியம். எனவே, நாம் மேற்சொன்ன திறன்களும், மனப்பாங்குகளும், ஆர்வமும் உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக நம்பினால், இத்துறையில் தாராளமாக மூழ்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us