பிரான்ஸ் | Kalvimalar - News

பிரான்ஸ்

எழுத்தின் அளவு :

பிரான்ஸ் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இங்கிலீஷ் கால்வாயை ஒட்டி அமைந்துள்ள ஒரு மேற்கு ஐரோப்பிய நாடாகும். கி.பி. 1789ல் நடந்த பிரெஞ்சு புரட்சிக்குப் பின் நெப்போலியனால் ஆளப்பட்ட இந்நாடு அதன் பின் இன்று வரை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்ட இந்த நாட்டில் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இதன் தலைநகரம் பாரீஸ்.

அறிவியல் முன்னேற்றத்திலும் அதன் புரட்சியிலும் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சித் துறைகளிலும் இந்த நாடு உலகிற்கு பல நன்மைகளை தந்துள்ளது. ஜி8 கூட்டமைப்பு நாடுகளின் ஒரு அங்கமாகக் திகழும் பிரான்சின் பொருளாதாரம் உலகளவில் 6வது இடத்தில் இருக்கிறது. இங்கு பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ.

பிரெஞ்ச் கல்வியின் சில சிறப்புகள்:
பிரான்சின் கல்வி முறை உலகளவில் பெயர் பெற்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடான பிரான்சில் கல்வி பயின்றவர்கள் இதனை ஒரு அரிய அனுபவமாகவே கருதுகிறார்கள். இங்குள்ள கல்வி முறையைப் பற்றிப் பேசி அறிவதைவிட நேரில் அனுபவங்களை சந்தித்தால் தான் அதன் நுட்பங்களை உணர முடியும் என்று கூறப்படுகிறது. பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில சேருகிறார்கள்.
  • பிரான்சில் உயர் படிப்பு படிக்கும் போது பிரெஞ்சு மொழி தெரிந்தால் மட்டுமே படிக்க முடியும் என்ற பொதுவான எண்ணம் இருக்கிறது. ஆனால் இங்கு ஏற்கனவே பயின்ற நமது மாணவர்கள் இதனை பொய்யாக்கி இருக்கிறார்கள். உயர் கல்வி ஆங்கில வழியிலேயே இருப்பதால் நல்ல ஆங்கில அறிவே போதுமானது.
  • யூரோவின் மதிப்பு உலகிலேயே அதிகம் என்பதால் இங்கு படிக்க பெரும் செலவாகும் என்று நம்பப்படுகிறது. ஆனால் கல்விக்கு பிரான்சில் பெரும் நிதியுதவிகள் பிரெஞ்ச் அரசால் தரப்படுகிறது. இதனால் கல்விக்கான கட்டணங்கள் மிக அதிகம் என்று கூற முடியாது.


பிரான்ஸ் கல்வி முறை
பிரான்சின் கல்வி முறை மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட முறையில் உள்ளது. பிரான்சின் கல்வி முறையைப் பொதுவாக 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  • ஆரம்பப் படிப்புகள் எனப்படும் என்செய்ன் மென்ட் பிரைமரி
  • பள்ளிப்படிப்புகள் எனப்படும் சென்செய்ன் மென்ட் செகண்டரி
  • உயர் படிப்புகள் எனப்படும் என்செய்ன்மென்ட் சுப்பீரியர்
    ஆரம்பப் படிப்புகள் பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பிரெஞ்சு குடியரசு நடத்தும் பள்ளிகளே அதிகளவில் இருக்கின்றன. இது தவிர தனியார் பள்ளிகளும் கத்தோலிக்கப் படிப்புகளுக்கான பள்ளிகளும் உள்ளன.
செகண்டரி எஜூகேஷன் படிப்புகள் 7 ஆண்டுகளுக்கானவை. முதல் 4 ஆண்டு படிப்புகள் கல்லூரி படிப்பு என்றும் அடுத்த 3 ஆண்டு படிப்புகள் லைசீ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த படிப்புகளை முடித்வர் பக்காலே என அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலை படிப்புகளை முடித்தவர்கள் பிரிட்டனின் ஏ ஸ்கூல்/அமெரிக்காவின் ஆக்ட்/சாட்/ஆஸ்திரேலியாவின் மேல்நிலைப் பள்ளி படிப்பு போன்றவற்றுக்கு இணையாகக் கருதப்படுகிறார்கள்.

பிரான்சின் உயர் படிப்புகள்: பிரான்சின் உயர் படிப்புகளின் சிறப்பு என்னவென்றால் பல துறை சார்ந்த படிப்புகள் இங்கு அதிகம் உள்ளது. தவிர, மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் அதிக அளவிலான கல்விப் பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை காரணமாக பிரான்சில் கல்வி பயிலுவது ஒரு முழுமையான கல்வி அனுபவமாக திகழ்கிறது.
பிரான்சின் உயர் படிப்புகள் பொதுவாக 2 பிரிவுகளாக உள்ளது. கிராண்ட்ஸ் இகோல்ஸ் மற்றும் பல்கலைக்கழக படிப்புகள் மிகவும் பெருமைக்குரிய படிப்புகளாகக் கருதப்படுகின்றன. கிராண்ட்ஸ் இகோல்சின் கீழ் உள்ள இகோல் பாலிடெக்னிக் படிப்புகளே பிரான்சில் பிரசித்தி பெற்றவை. இங்கு சேருவதற்கான அனுமதியும் பெரும் போட்டியை உள்ளடக்கியது.
இகோல் பாலிடெக்னிக் பள்ளியின் படிப்புகள் உலகளவில் 4வது இடத்தில் உள்ளன. இங்கு ஆசிரியர்கள் நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவது இல்லை. குறிப்பிட்ட துறைக்கு குறிப்பிட்ட பாடப் பகுதியில் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அமர்த்தப்படுவதால் சொல்லிக் கொடுக்கும் பகுதி முழுமையாக இருக்கிறது. ஆய்வுப் பணிகள் நமது நாட்டில் உள்ளது போல பல்கலைக்கழகங்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. இதற்கென்ற தனியாக சி.என்.ஆர்.எஸ்., அல்லது இன்செர்ம் என்ற ஆய்வு நிறுவனங்கள் தனியாக உள்ளன. பிரான்சின் கல்விக் கட்டணம் குறைவு தான். உயர் கல்விக்கு பிரெஞ்சு அரசே நிதியுதவி செய்வதால் படிக்கும் பிரிவைப் பொறுத்து ஆண்டுக் கட்டணம் மாறுபடுகிறது. பட்ட மேற்படிப்புகளைக் கூட ஒன்று முதல் 2 லட்ச ரூபாய்க்குள் படித்து விட முடிகிறது.
குறைந்த வருமானம் உள்ளவர்கள் பிரெஞ்ச் கல்வி பயில தேர்வு செய்யப்படும் போது அவர்களுக்கு படிப்புக்கான கல்வி உதவித் தொகை மற்றும் குறைந்த கட்டண சலுகை போன்ற நிதியுதவிகள் தரப்படுகின்றன.
அரசு சார்ந்த இன்ஜினியரிங் பள்ளிகளில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டாலும் தனியார் இன்ஜினியரிங் பள்ளிகளில் அதிக செலவாகிறது.
பிரான்சின் சி.பி.ஜி.ஈ., எனப்படும் உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக வரையறைகளுக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு அமைப்பாகும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரிவில் மட்டும் இங்கு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த வகைப் படிப்புகள் பிரான்சில் பெரிதும் மதிக்கப்படுவதோடு அதிகளவிலான அறிவியல் அறிஞர்களையும் நிர்வாகத் தலைவர்களையும் உருவாக்கியுள்ளது. இந்த வகைப் படிப்புகள் பொதுவாக 2 ஆண்டுகள் கால அளவைக் கொண்டதாக இருக்கின்றன.

பிரெஞ்ச் கல்விக்கு விண்ணப்பிக்கும் முறை:
பொதுவாக பிரான்சின் கல்வியாண்டு என்பது செப்டம்பர் முதல் தொடங்குகிறது. இருந்த போதிலும் சில நிறுவனங்கள் கோடைகாலம், வசந்த காலம் மற்றும் மழைக்கால சிறப்பு வகுப்புகளைத் தொடங்குகின்றன. பிரான்சில் படிக்க விரும்புபவர்கள் புதுடில்லியிலுள்ள பிரான்ஸ் துõதரகத்தை நவம்பர் 15 முதல் ஜனவரி 15க்குள் தொடர்பு கொள்ள வேண்டும். இங்கிருந்து பெற்ற விண்ணப்பங்களை பிப்ரவரி 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக மேலும் சில குறிப்புகள்
  • ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கவுள்ள படிப்புகளுக்கு நவம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆண்டின் 2ம் காலாண்டில் தொடங்கவுள்ள படிப்புகளுக்கு மார்ச் 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆண்டின் 3ம் காலாண்டிலும் 4வது காலாண்டிலும் தொடங்கவுள்ள படிப்பகளுக்கு மே 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா இல்லையா என்பது தெரிவிக்கப்படும்.
    பதிவு செய்யும் முறை: பிரான்சில் என்ன படிக்கவிருக்கிறோம் என்பதை முடிவு செய்து விண்ணப்பங்களைப் பெற்று விட்ட உடன் நாம் என்ன படிக்கவிருக்கிறோம் எங்கு படிக்கவிருக்கிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நாம் தேர்வு செய்துள்ள கல்வி நிறுவனம் நம்மை சேர்த்துக் கொள்ள சம்மதிக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நம்மை சேர்த்துக் கொள்ள நமது கல்வித் தகுதிகளுடன் குடும்பப் பொருளாதாரச் சூழல்களையும் சேர்த்து பிரெஞ்சு கல்வி நிறுவனங்கள் எடை போடுகின்றன.
  • பொதுவாக பிரெஞ்சு கல்வி நிறுவனங்கள் ஜூன் மாதத்திற்குள்ளாக படிப்பிற்கான சேர்க்கை அனுமதியை உறுதி செய்கின்றன. மிகுந்த ஆய்வுக்குப் பின்னரே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதன் பின் நேர்காணல் தேர்வுகளும் நடத்தப்படும். நம்மை சேர்த்துக் கொள்ள பிரெஞ்சு நிறுவனங்கள் முடிவெடுத்தபின் நமக்கு ஒரு அனுமதிக் கடிதம் அனுப்பப்படும். இந்த அனுமதிக் கடிதம் வந்ததும் நாம் விசா பெறுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.


என்.ஓ.சி. பெறத் தேவையானவை:
விசா பெறுவதற்குத் தேவையான என்.ஓ.சி., பெற 2ம் நிலையில் நாம் எடுத்துச் செல்ல வேண்டியவை இவை தான்...

  • பிரெஞ்சு கல்வி நிறுவன சேர்க்கை அனுமதிக் கடிதம்
  • படிப்புச் செலவுக்கான கட்டணத்திற்கான நிதி நிலை பற்றிய அறிக்கை
  • படிக்கும் காலத்தில் பிரான்சில் தங்குதற்கான
    விபரங்கள் மற்றும் சான்று
  • பயோடேட்டா
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  • தகுதி தரும் படிப்புக்கான சான்றிதழ்களின் நகல்கள்
  • பாஸ்போர்ட் நகல்
  • விமான டிக்கட்டின் நகல்
  • CEDUST பெயரில் டில்லியில் மாற்றத்தக்க ரூ.4000க்கான டிடி


பிரான்ஸ் விசா யாருக்குத் தேவை?
பிரான்சில் முழு நேரப்படிப்புகள், எராஸ்மஸ்/முண்டஸ் படிப்புகள், மாணவர் பரிமாற்றத் திட்டப்படிப்புகள், கோடை கால பிரெஞ்சு மொழிப் படிப்புகள், குறுகிய காலப் படிப்புகள் போன்றவற்றை படிக்கச் செல்பவர்கள் விசா பெற வேண்டும். பிரெஞ்சு விசா 3 நிலைகளைக் கொண்டது.



விசா பெறும் முறை
  • முதலில் www.india.campusfrance.org என்னும் இன்டர்நெட் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது கேம்பஸ் பிரான்ஸ் ரெஜிஸ்டிரேஷன் எனப்படுகிறது. இதைச் செய்வதற்கு முன் நமது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கேம்பஸ் பிரான்ஸ் கவுன்சிலர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். நமக்கு அண்மையில் சென்னையில் இம் மையத்தின் கவுன்சிலர் அலுவலகம் 24, காலேஜ் சாலை, நுங்கம்பாக்கம் என்னும் முகவரியில் உள்ளது.
  • 2ம் நிலையில் பிரான்ஸ் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து என்.ஓ.சி., எனப்படும் தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும். இது நேர் காணலுக்குப் பின் தரப்படுகிறது. சென்னையில் இதற்கான அதிகாரி உள்ளார். இதைப் பெற சில தேவைகள் உள்ளன. (பாக்சில் பார்த்துக் கொள்ளவும்)
  • 3ம் நிலையில் பாஸ்போர்ட்டை பிரெஞ்சு துõதரகத்தில் கொடுத்து முத்திரை பெற வேண்டும். தமிழகத்திலிருந்து என்.ஓ.சி., பெற சென்னை அலுவலகத்தில் ஒப்பந்தம் பெற்ற பின் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் இதனைப் பெற வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us