உயர்கல்வி துறையை தேர்வு செய்வது எப்படி? | Kalvimalar - News

உயர்கல்வி துறையை தேர்வு செய்வது எப்படி?

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 முடித்தவுடன் எந்த துறையில் சேரலாம் என்ற முக்கிய முடிவை மாணவர்கள் எடுக்க வேண்டியுள்ளது. படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் துறையையே அனைவரும் விரும்புகின்றனர். மருத்துவம், இன்ஜினியரிங் துறைகளில் சேரவே போட்டி அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட படிப்பை தேர்ந்தெடுக்கும் முன், சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

* மாணவர்களின் விருப்பம்
* கற்கும் திறன்
* பொருளாதார சூழ்நிலை
* பாலினம் (ஆண்/பெண்)
* இருப்பிடத்துக்கும், கல்வி நிறுவனத்துக்கும் இடையே உள்ள துõரம்
* உயர்கல்வியில் வாய்ப்பு
* படிப்பின் காலம்
* உடனடியாக வேலை வழங்கக்கூடிய படிப்பு

சேர இருக்கும் படிப்பு தொடர்பாக எடுக்கும் முடிவுக்கு, இவற்றை கருத்தில் கொள்ளலாம். இருப்பினும் குறிப்பிட்ட கல்லுõரியில் சேரும் முன் சில விஷயங்களை கவனிக்கவும்.

* கல்வி நிறுவனத்தின் வரலாறு, தனிச்சிறப்பு
* உள்கட்டமைப்பு வசதிகள் (நுõலகம், ஹாஸ்டல், கம்ப்யூட்டர் மையம்)
* கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம்/ பாடத்திட்டங்கள்
* கல்லுõரியில் பயின்ற பழைய மாணவர்களின் நிலை
* கேம்பஸ் தேர்வுக்கான சாத்தியக் கூறுகள்
* கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள்
* கல்வி உதவித்தொகை மற்றும் பிற உதவிகள்
* தேர்வு செய்யும் துறையின் வளர்ச்சி
* மேற்படிப்புக்குரிய சாத்தியக் கூறுகள்
* ஹாஸ்டல் வசதி

படிப்பின் தன்மை, ஆராய்ச்சி, அதற்கான வேலைவாய்ப்பு போன்றவற்றை நன்கு தெரிந்து கொண்ட பின்பே படிப்பை தேர்வு செய்ய வேண்டும். பல மாணவர்கள், படிப்பைப் பற்றி முழு விவரங்களை அறியாமல், ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து விடுகின்றனர். நண்பர்கள் சரிவர விபரம் அறியாமல் கூறும் யோசனைகளை கேட்டும் ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து விடுகின்றனர்.
இதனால் பாதிப்பு மாணவர்களுக்கே. இவற்றை தடுக்க மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பாடத் திட்டங்களைப் பற்றிய முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

கற்றலில் உள்ள முழுமையான ஈடுபாடு, படிப்பு தொடர்புடைய பணியின் தன்மை போன்றவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக விரும்பிய துறையில் அறிவை முழுமையாக வளர்த்துக் கொண்டு செயல்பட்டால் வெற்றி உங்கள் வசம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us