இன்டீரீயர் டிசைனிங் பிரிவல் மேற்படிப்பு என்ன படிக்கலாம்? | Kalvimalar - News

இன்டீரீயர் டிசைனிங் பிரிவல் மேற்படிப்பு என்ன படிக்கலாம்?டிசம்பர் 08,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இப் படிப்பை முடிப்பவருக்கு பொதுவாக இந்தத் துறையில் இன்டீரியர் டெகரேட்டர், தியேட்டர் செட் டிசைனர், எக்சிபிஷன் டிசைனர், விண்டோஸ் டிஸ்பிளே டிசைனர் போன்ற வேலைகள் கிடைக்கின்றன. என்றாலும் வெறும் படிப்பு இருப்பதால் மட்டுமே வேலை கிடைக்காது அல்லவா? எனவே நீங்கள் இந்தத் துறையில் சிறப்பாக உருவாக பின்வரும் தன்மைகளையும் தகுதிகளையும் பெற்றிருப்பது கூடுதல் பலன் தரும்.

* மாறிக் கொண்டே வரும் சமூக பண்பாட்டு மாற்றங்களை அறிந்திருத்தல்
* ஓவியத் துறையில் ஆர்வம் இருத்தல்
* கற்பனை வளம் பெற்றிருத்தல்
* படமாக வரைவதை
உருவாக்கும் ஆற்றல் பெற்றிருத்தல்
நீங்கள் இந்தத் துறையில் மேற்படிப்பு படிக்க விரும்பினால்  ஆமதாபாத்திலுள்ள ஸ்கூல் ஆப் இன்டீரியர் டிசைன், சென்டர் பார் என்விரான் மென்டல் பிளானிங் அண்ட் டெக்னாலஜி தரும் சிறப்பு டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us