திறமையான என் 12 வயது மகளை மேம்படுத்துவது எப்படி? | Kalvimalar - News

திறமையான என் 12 வயது மகளை மேம்படுத்துவது எப்படி?

எழுத்தின் அளவு :

உங்கள் மகள், உடனடியாக, அதிகளவு கோர்ஸ்களில் சேர வேண்டும் என்றோ அல்லது பலவிதமான திறன்சார் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றோ, நீங்கள் அவசரம் காட்டக்கூடாது. உங்களின் மகளுக்கு எதில் ஆர்வமுள்ளதோ, அதிலேயே அவள் ஈடுபடுவதற்கு சுதந்திரம் கொடுங்கள். தனக்கு எதில் ஆர்வமிருக்கிறது என்பதை உங்களின் மகள்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதை அவள் கண்டுபிடித்தப் பிறகு, அதை நோக்கிய தனது பயணத்தை உறுதியாகவும், தெளிவாகவும் தொடங்க வழியேற்படும்.

உங்கள் மகள், பன்முகத் திறமை கொண்டவளாக மாற்றப்பட வேண்டும் என்ற உங்களின் அவசரமான முயற்சியானது, உண்மையிலேயே, தனக்கு எதில் ஆர்வமுள்ளது என்பதை அறியாத வண்ணம், உங்கள் மகள் குழம்பி விடுவாள். அவள் வளர வளர, அவளுக்குப் பிடித்தமான பாடத்தில் கவனம் செலுத்தி, படிப்பதை அனுபவிக்கத் தொடங்குவாள்.

உங்கள் மகளின் படிப்பின் ஊடாகவே, நீங்கள் அவளுக்கு பல்வேறான வாய்ப்புகளை வழங்கலாம். பல நல்ல புத்தகங்களைப் படிக்க கொடுக்கலாம். ஆன்லைன் நூலகம் மற்றும் சாதாரண நூலகங்களைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கலாம். அறிவாளியான மனிதர்களுடன் பழகும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரலாம் மற்றும் சிறப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இதன்மூலமாக, தன்னைச் சுற்றியுள்ள உலகை உங்களின் மகள் அறிந்துகொள்ள வழியேற்படும்.

போதுமான இடைவெளி, உற்சாகம் மற்றும் தேவையான வளங்களைப் பெற்ற உங்களின் மகள், தனது பெற்றோரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவாள்!

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us