மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் நான் நாடிகல் அல்லது மரைன் இன்ஜினியரிங் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பின் என்ன படித்தால் இதற்குச் செல்ல முடியும்? | Kalvimalar - News

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் நான் நாடிகல் அல்லது மரைன் இன்ஜினியரிங் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பின் என்ன படித்தால் இதற்குச் செல்ல முடியும்?மே 12,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 3ம் ஆண்டு படிக்கும் நீங்கள் மரைன் துறைக்குச் செல்ல வேண்டுமானால் பட்ட மேற்படிப்பாகத் தான் செல்ல வேண்டும். நேவல் ஆர்க்கிடெக்சர் பிரிவில் பட்ட மேற்படிப்பு முடித்தால் உங்களது கனவுத் துறைக்குச் செல்ல முடியும்.

கப்பல் வடிவமைப்பு, கப்பல் நிலைத் தன்மை போன்ற கப்பல் தொடர்பான பல டெக்னிகல் அம்சங்களை நீங்கள் இதில் அறியலாம். நேவல் ஆர்க்கிடெக்டுகள் கப்பல் கட்டும் தளப் பணிகளிலும், கப்பல் வடிவமைப்பு மேற்பார்வைப் பணியிலும், கன்சல்டன்சி பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இன்ஜினியர்ஸ் இந்தியா, ஸ்காட் வில்சன், எல் அண்டு டி ராம்போல், டி.ஆர்.டி.ஓ., என்.பி.ஓ.எல்., என்.எஸ்.டி.எல். போன்ற துறை தொடர்பான நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள்.

துவக்கத்தில் டிசைன் இன்ஜினியர், நேவல் ஆர்க்கிடெக்ட், சிஸ்டம்ஸ் இன்ஜினியர், டெஸ்ட் இன்ஜினியர் என நீங்கள் பணியாற்ற முடியும்.
ஐ.ஐ.டி. காரக்பூர், ஐ.ஐ.டி. சென்னை, கொச்சின் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்தப் படிப்பை நீங்கள் படிக்கலாம். வெளிநாடுகளில் மிச்சிகன் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, கிளாஸ்கோவ் பல்கலைக்கழகம்,நியூகாஸில் பல்கலைக்கழகம் ஆகிய புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலும் இதைப் படிக்கலாம்.

மரைன் இன்ஜினியரிங் படிக்க விரும்பினால் இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்களில் படிக்கலாம். மரைன் இன்ஜினியர்களுக்கான சிறப்புப் பணி வாய்ப்புகளை ஷிப்பிங் கார்ப்ப ரேஷன் ஆப் இந்தியா, பின்னி இன்டர்நேஷனல், கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனி, தொலானி ஷிப்பிங் கம்பெனி, கேரளா லைன்ஸ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் போர்ட் மேனேஜ்மென்ட், டிரெட்ஜிங் கார்ப்பரேஷன், பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன், குஜராத் மைனிங்போன்ற பல நிறுவனங்களில் சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us