ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர் | Kalvimalar - News

ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்

எழுத்தின் அளவு :

வயர்லெஸ் சாதனங்களான மொபைல் போன், ரேடியோ போன்றவற்றை பயன்படுத்த தேவையான சமிக்ஞைகளை (சிக்னல்கள்) உருவாக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாள்பவர்களே ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்கள். சுருக்கமாக "ஆர்.எப். இன்ஜினியர்கள்" என்று அழைப்படுகிறார்கள். நவீன தகவல் தொழில்நுட்பங்களான ஜி.எஸ்.எம்., (குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கம்யூனிகேசன்), சமிக்ஞைகளை பெற மற்றும் அனுப்ப உதவும் பல்வேறு வகையான ஆன்டனாக்கள் போன்றவற்றை பற்றிய தொழில்நுட்பங்களை ஆர்.எப். இன்ஜினியர்களுக்கு நன்கு தெரியும். இது தவிர அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்மிட்டர்கள், வயர்லெஸ் கருவிகள் போன்றவற்றின் தொழில்நுட்பங்களை பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். தேவையான தகுதிகள் பிளஸ்2 வில் இயற்பியல் பாடத்தை எடுத்து படித்திருப்பது இத்துறைக்கு தேவையான அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது. பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவர்களும் ஆர்.எப் இன்ஜினியர்களாக ஆக முடியும். ரேடியோ ப்ரீக்வென்சி சார்ந்த இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., மற்றும் டிப்ளமோ படிப்புகளை இந்தியாவிலேயே படிக்கலாம். சான்றிதழ் படிப்புகளாகவும் இவை கற்றுத்தரப்படுகின்றது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புடன் சேர்ந்த பயிற்சியாக இவற்றை வழங்குகின்றன. வேலைவாய்ப்பு பெருகி வரும் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள், எப்.எம் வானொலி நிலையங்கள் ஆகியவற்றில் ஆர்.எப் இன்ஜினியர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் இந்தியாவிலேயே உள்ளது. வெளிநாடு களிலும் இவர்களுக்கு நல்ல மவுசு உள்ளது. கல்வி நிறுவனங்கள் * ஐ.ஐ.டி., காரக்பூர் * ஐ.ஐ.டி., கவுகாத்தி * மும்பை பல்கலைக்கழகம், மும்பை * வித்ய விகாஸ் இன்ஸ்டிடியூட், மைசூர் * பி.என்., கல்லூரி, லக்னோ * பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி * அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி * டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us