தொலைத் தொடர்பு துறையில் சாதிப்பதற்கு புதிய படிப்புகள் | Kalvimalar - News

தொலைத் தொடர்பு துறையில் சாதிப்பதற்கு புதிய படிப்புகள்

எழுத்தின் அளவு :

ஒரு மனிதன் மற்றொரு பகுதியில் உள்ள நபருடன் நொடியில் தொடர்பு கொள்வது எளிதான நிகழ்வாக மாறிவிட்டதற்கு முக்கிய காரணமாக தொலைபேசி இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தொலைபேசிகளும், செல்பேசிகளும் மனித வாழ்க்கைக்கு அவசியமானதாகிவிட்டது. மார்ச் 2013 கணக்கீட்டின்படி 898 மில்லியன் சந்தாதாரர்கள் தொலைபேசியை உபயோகிக்கிறார்கள். சந்தாதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பணியாளர்களும் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். ஒரு ஆய்வறிக்கையின் படி தற்போதைய தொலைத்தொடர்பு கொள்கையின் மூலம் ஏற்படும் வளர்ச்சிக்கு தகுந்தவாறு 2015 ஆம் ஆண்டிற்குள் 2.5 மில்லியன் பணியாளர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். இது போன்ற சூழ்நிலையில், திறமையான பணியாளர்களை நேரடியாக தேர்ந்தெடுக்க நிருவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. எனவே அதற்கேற்ற வகையில் பணியாளர்களை உருவாக்குவது அவசியமாகிறது. பணியாளர்களை உருவாக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களுக்கு துறையைப் பற்றி முதலில் நன்கு கற்றுக் கொடுப்பது அவசியமாகிறது. இதனை உனர்ந்து கொண்ட மும்பையில் உள்ள "விஸ்கூல்" கல்வி நிறுவனம் மகாநகர் டெலிஃபோன் நிகாம் லிமிட்டட் (MகூNஃ) உடன் இணைந்து இரண்டு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கஎககூM ( போஸ்ட் கிராஜூவேட் புரோகிராம் இன் டெலிகாம் மேனேஜ்மென்ட் ) தொலைத்தொடர்பு துறையின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக விபரங்களை உள்ளடக்கியதாக இந்த படிப்பு வழங்கப்படுகிறது. தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டய படிப்பு படித்திருக்க வேண்டும். இகூMM ( சர்டிஃபிகேட் இன் டெலிகாம் மார்க்கெட்டிங் அன்ட் மேனேஜ்மென்ட் ) தொலை தொடர்புத்துறையின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் துறைகள் குறித்து கற்றுத்தரும் வகையில் அளிக்கப்படுகிறது. தகுதி பிளஸ் 2 / டிப்ளமோ / ஐ.டி.ஐ. போன்றவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு தீதீதீ.தீஞுடூடிணடுச்ணூணிணடூடிணஞு.ணிணூஞ் என்ற இணையதளத்தைக் காணவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us