எழுத்தின் அளவு :

தகுதி அளவு

வயது : இலங்கை உதவித்தொகை பெற 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
 
கல்வித் தகுதி: அனுபவம் மிக்க ஆராய்ச்சியாளர், தனது ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்

  • விண்ணப்பிப்பவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • இந்தியாவில் ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தில் / கல்லூரியில்/ கல்வி மையத்தில் நிரந்தர பதவி வகிக்க வேண்டும்.
  • பெல்லோஷிப் பெறும் காலத்தில் வேறு எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
உதவித்தொகை விபரங்கள்
 
உதவித்தொகை எண்ணிக்கை
வங்கதேசம் 6
பூடான் 1
நேபாளம் 1
பாகிஸ்தான் 6
இலங்கை 6
 
கால அளவு : ஒரு ஆண்டு (இலங்கை பெல்லோஷிப்புக்கு இரண்டு ஆண்டு)

வழங்கப்படும் அளவு

வங்தேசம்
பராமரிப்பு அலவன்ஸ் : மாதம் 500 டிகே.
புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் : ஆண்டுக்கு 4000 டிகே.
பயண மான்யம்: ஆண்டுக்கு 3000 டி.கே.
அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் இடம் இலவசம்.
மருத்துவ வசதிகள்
15 நாட்கள் விடுமுறை
திரும்புவதற்கான விமான கட்டணம்.
 
பூடான்
போதுமான மாதாந்திர உதவித் தொகை
தங்கும் இடம்
புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களுக்கு தகுந்த மான்யம்
உள்நாட்டு பயண மான்யம்
இலவச மருத்துவ வசதிகள்.
 
நேபாளம்
பராமரிப்பு அலவன்ஸ் : மாதம் ரூ.3000/-
புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வருடம் ரூ.5000/-
வீட்டு அலவன்ஸ் : மாதம் ரூ.1500/-
 
பாகிஸ்தான்
பராமரிப்பு அலவன்ஸ்: மாதம் ரூ.6000/-
சில்லரை செலவுகள் மான்யம்: ஆண்டுக்கு ரூ.10,000/-
நன்கு பர்னிஷ் செய்யப்பட்ட தங்குமிடம்
மருத்துவ வசதிகள்.
 
இலங்கை
பராமரிப்பு அலவன்ஸ் மாதம் ரூ.45000/-
எழுது பொருட்கள் மற்றும் டைப்பிங் ஆண்டுக்கு ரூ.5000/-
புத்தகங்கள் : ஒரே தவணையாக ரூ.5000/-
தகுந்த தங்குமிடம்
மருத்துவ வசதிகள்.
 
பயண மான்யம்: சர்வதேச பயணங்களுக்கான சுற்றுலா செலவு/ விமானத்தில் எக்கானமி வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை வழங்குகிறது. பயண கட்டணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் எழுதி பெற்றுக் கொள்ளலாம்.
 
விண்ணப்ப நடைமுறைகள்: பணிபுரிவோர் தங்களின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலமாக அனுப்ப வேண்டும். மற்றவர்கள் கடந்த முறை படித்த கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தைப் போன்று இருப்பதோடு, தேவையான ஆவணங்கள் மற்றும் வெளியிடப்பட்ட கட்டுரைகள் போன்ற விபரங்களுடன் அனுப்பப்பட வேண்டும்.
 
தேர்வு நடைமுறைகள்: யுஜிசி-யால் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சகம் மூலமாக/ சார்க் செயலகம் மூலமாக அனுப்பி வைக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அவர்கள் தேர்வுசெய்யப்பட்ட விபரம் கடிதம் மூலமாக தெரிவிக்கப்படும். கல்வி ஆண்டு துவங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, பெல்லோஷிப் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
 
அறிவிப்பு:  ஆகஸ்ட் மாதங்களில் அறிவிக்கப்படும்.
 
இந்த கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்: பல்கலைக்கழக மான்யக் குழு

Scholarship :  சார்க் உதவித்தொகை
Course :  மேலாண்மை மற்றும் நிதி - முதுகலை டாக்டர் பட்ட படிப்பு
Provider Address :  University grants commission, Bahadurshah zafar marg, New Delhi - 110002. http://www.ugc.ac.in/
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us