எழுத்தின் அளவு :

சர்வதேச மாணவர்கள், ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை கல்வி படிப்பதற்கு ஜப்பான் அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஜப்பானின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் (MEXT) இத்தொகையை வழங்குகிறது.

சிறப்பு பயிற்சி கல்லூரி இக்கல்லூரியில் கீழ்க்கண்ட மூன்றாண்டு படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* தொழில்நுட்பம்
* சுய கவனிப்பு
* கல்வி மற்றும் நலத்துறை
* வியாபாரம்
* ஆடை வடிவமைத்தல்
* கலாசாரம் மற்றும் பொதுக்கல்வி
*  இதர துறைகள்

தொழில்நுட்ப கல்லூரிகள்
இக்கல்லூரிகளில் கீழ்க்கண்ட நான்காண்டு படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* மெக்கானிக்கல்
* எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்
* இன்பர்மேஷன், கம்யூனிகேசன் மற்றும் நெட்வொர்க்
* மெட்டீரியல் இன்ஜினியரிங்
* ஆர்க்கிடெக்சர் மற்றும் சிவில்
* கடல்சார் இன்ஜினியரிங்
* இதர துறைகள் பல்கலைக்கழகம்

(இளநிலை பட்டப்படிப்பு)
கீழ்க்கண்ட ஐந்தாண்டு பாடப்பிரிவுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* சமூக அறிவியல் மற்றும் மானுடவியல்
* இயற்கை அறிவியல்

தகுதிகள்:
 பிளஸ் 2 தேர்ச்சியுடன், ஓர் ஆண்டு கண்டிப்பாக ஜப்பானிய மொழி படித்திருக்க வேண்டும்.

தேர்வு:
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக வளாகத்தில் நடக்கும் எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ளவேண்டும். தேர்வு நடக்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். இத்தேர்வு எழுத ஜப்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.studyjapan.go.jp/en/index.html  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை டவுண்லோடு செய்யலாம். அல்லது கீழ்கண்ட முகவரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெறலாம்.

முகவரி:
ஜப்பானிய தூதரக வளாகம் (கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துறை),
12/1, செனடோப் ரோடு,
தேனாம்பேட்டை, சென்னை - 18.

மேலும் விபரங்களுக்கு: 044  2432 3860 - 63

Scholarship :  ஜப்பான் அரசின் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us