எழுத்தின் அளவு :

மாற்றுத் திறனாளி மாணவர்கள் தொழில் படிப்புகளை படிப்பதற்கு தமிழக அரசு அளிக்கும் கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான அறிவிப்பை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வெளியிட்டது.

இந்திய அரசின் தேசிய உடல் ஊனமுற்றோருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் நடப்பாண்டில் தகுதியுள்ள ஆயிரம் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியானது மாநில வழிநடத்தும் அமைப்பாக செயல்படுகிறது. பொறியியல், மருத்துவம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தகுதியுள்ள மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்கள் உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதத்துக்கு ரூ.2,500-ம், புத்தகங்கள், இதர கல்வி உபகரணங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரமும் அளிக்கப்படும்.

முதுகலை மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்ட மேற்படிப்புக்காக மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.3 ஆயிரமும், புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்களுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

விவரங்களுக்கு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் ஊரக திட்டப் பிரிவை 044-2530 2345 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற  இணைய தளத்தை காணவும்.

Scholarship :  மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us