எழுத்தின் அளவு :

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை தேர்வு செய்து பல்வேறு அறக்கட்டளைகளின் சார்பில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.

செல்வி வி. சாராவதி மெமோரியல் என்டவுன்மென்ட்

செல்வி வி. சாராவதி மெமோரியல் என்டவுன்மென்ட் சார்பில் எம்.பில்., மற்றும் பிஎச். டி., பயிலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகியது.

லேடி கே.ஸ்ரீனிவாச அய்யங்கார் என்டவுன்மென்ட்

லேடி கே. ஸ்ரீனிவாச அய்யங்கார் என்டவுன்மென்ட் சார்பில் பிஎச்.டி., சமஸ்கிருதம் பயிலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

டாடாச்சாரி என்டவுன்மென்ட்

ஆர் டாடாச்சாரி என்டவுன்மென்ட் எம்.பில்., கன்னடம் பயிலும் இரண்டு மாணவர்களுக்கும், எம்.ஏ., இசை இரண்டாமாண்டு பயிலும் ஒரு மாணவருக்கும், எம்.ஏ இசை இரண்டாமாண்டு பயிலும் ஒரு மாணவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

என்.சி வசந்தகோகிலம் என்டவுன்மென்ட்

என்.சி. வசந்தகோகிலம் என்டவுன்மென்ட் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சம்புவராயர் என்டவுன்மென்ட்

சம்புவராயர் என்டவுன்மென்ட் சார்பில் எம்.பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000௦௦௦ உதவிதொகையும் பிஎச்.டி., எம்.எல்., எம்.எல்.எம்., எம்.பி.ஏ, எம்.சி.ஏ., பயிலும் மாணவர்களுக்கு ரூ.5000௦௦௦ உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in என்ற இணையதளத்தை காணவும்.

Scholarship :  சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கான உதவித்தொகைகள்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us