எழுத்தின் அளவு :

ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சிட்டி என்டவுன்மென்ட் சார்பில் கண்பார்வையற்ற  ஐந்து வருட முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவிதொகையானது சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியில் பயிலும் 2 மாணவர்களை தேர்வு செய்து ஆண்டிற்கு தலா ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும்.

இளநிலை பட்ட படிப்பு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முதுநிலை முதலாமாண்டு எடுக்கும் மதிப்பெண்ணை பொறுத்து இரண்டாமாண்டிற்கும் உதவித்தொகை தொடரும்.

சேர்க்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
1. அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. மாணவர்கள் பயிலும் கல்லூரியில் நல்லொழுக்க சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியமாகும்.

மாற்று  திறனாளியான கால் ஊணமூற்றோர், வாய் பேச முடியாதவர், காது கேளாதோர் போன்ற மாணவர்களும் பதிவு செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in இணையதளத்தை காணவும்.

Scholarship :  கண்பார்வையற்ற முதுநிலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us