எழுத்தின் அளவு :

பொறியியல், பார்மசி போன்ற தொழிற்படிப்பில் முதுகலை பட்டபடிப்பு படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

யூனிவர்சிட்டி கிரான்ட்ஸ் கமிஷன் (யுஜிசி) ஆண்டுதோறும் 1000 மாணவர்களை தேர்வு செய்து அளிக்கும் இந்த உதவித் தொகையை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

2010-11ம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்கும் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

உதவித்தொகை பெறுவதற்கான தகுதி, விதிமுறைகள் போன்றவற்றை www.ugc.ac.in  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை www.ugc.ac.in/pgsprof  ஆன்லைனில் மட்டுமே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

Scholarship :  தொழிற்பிரிவு மாணவர்களுக்கான உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us