எழுத்தின் அளவு :

Felix  உதவித்தொகையானது ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகம் அல்லது லண்டன் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்டு ஆப்ரிகன் ஸ்டடிஸ்- கல்லூரியில்(SOAS) பயில்வதற்கு வழங்கப்படுகிறது. மருத்துவம் தவிர, இக்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளுக்கும் இது பொருந்தும்.

கல்வி நிறுவனத்தின் முழு கட்டணம், வாழ்வதற்கான செலவினமும், இந்தியா -பிரிட்டன் இடையேயான விமானக் கட்டணமும் படிப்பின் துவக்கத்தில் இருந்து மூன்றாண்டு நிறைவு வரைக்கும் வழங்கப்படுகிறது.

கல்வி நிறுவனத்துக்கு 20 பேர் வீதம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 30 வயதை நிறைவு செய்யாதவராக இருக்க வேண்டும். நிதித்தேவையை தெளிவுபடுத்த வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பை நிறைவு செய்தவுடன், தங்களின் சொந்தநாட்டுக்கு திரும்பி விடுவதை இங்கிலாந்து அரசாங்கம் எதிர்பார்க்கும்.

மேலும் விவரங்களுக்கு  www.felixscholarship.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Scholarship :  பெலிக்ஸ் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us