எழுத்தின் அளவு :

ஆண்டுதோறும், உலகம் முழுவதிலுமிருந்தும் 15 மாணவர்கள், கடுமையான தகுதி மதிப்பீடுகளின் அடிப்படையில், மிகா மற்றும் அஹமத் எர்டிகன் கிராஜுவேட் உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஆக்ஸ்போர்டு பல்கலையில், மானுடவியல் படிப்புகளை மேற்கொள்வதற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையில், முழு கல்விக் கட்டணம், கல்லூரி கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் எர்டிகன் தங்குமிடப் பயன்பாடு போன்ற சலுகைகள் அடங்கியுள்ளன.

ஆக்ஸ்போர்டில் அமைந்துள்ள எர்டிகன் ஹவுஸ் என்ற கட்டடமானது, மாணவர்களுக்கான பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டது.

தகுதிகள்

முழுநேர முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள, ஏறக்குறைய 7 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், வரலாறு, மொழியியல், தத்துவம் மற்றும் பொனடிக்ஸ், மெடீவல் அன்ட் மாடர்ன் லாங்குவேஜஸ், இசை, ஓரியண்டல் ஸ்டடீஸ், தத்துவம் மற்றும் தியாலஜி ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.

இதுதொடர்பான முழு விபரங்களுக்கு www.ox.ac.uk என்ற வலைத்தளம் செல்க.

Scholarship :  மிகா மற்றும் எர்டிகன் உதவித்தொகை திட்டம்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us