எழுத்தின் அளவு :

தேசிய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கவுன்சில் "ராஜத் ஜெயந்தி சயின்ஸ் கம்யூனிகேட்டர் பெல்லோஷிப்" என்ற பெயரில் 20 பேருக்கு உதவித் தொகைகளை வழங்குகிறது.உதவித்தொகையின் நோக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்களில் குறிப்பிடத்தக்க கல்வி சாதனை மற்றும் அறிவியல் தொடர்புகள் பற்றிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கும் நபர்களுக்கு வழங்கப்படும். இது ஒரு முழு நேர பெல்லோஷிப் ஆகும்.

தகுதி

அறிவியல், பொறியியல், மருத்துவ அறிவியல், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், ஊடக தொடர்புகள் போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை அல்லது முதுநிலையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது

35 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். பெண்கள் என்றால் 40 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

காலம்: 1 வருடம்

உதவித்தொகையின் அளவு

மாதந்தோறும் செலவுத் தொகையாக 12,000 ரூபாய் அளிக்கப்படும். (பிஎச்.டி. படித்தவராயிருந்தால் மாதந்தோறும் ரூ.16,000 வழங்கப்படும்.) வருட பங்களிப்பாக ரூ.30,000 அளிக்கப்படும். போக்குவரத்துச் செலவுகளுக்காக ரூ.15,000 மற்றும் இதர செலவுகளுக்காக 20,000 ரூபாயும் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 15 செப்டம்பர் 2013.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.dst.gov.in என்ற இணையதளத்தை காணவும்.

Scholarship :  சயின்ஸ் கம்யூனிகேட்டர் பெல்லோஷிப்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us