எழுத்தின் அளவு :

ஜப்பான் அரசின் கல்வி, கலாச்சார, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ஜப்பான் தொழில்நுட்பக் கல்லூரி அல்லது அந்நாட்டு பல்கலையில், இளநிலைப் படிப்பை பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, உதவித்தொகைகளை வழங்குகிறது.

இந்த உதவித்தொகைகள், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளன. இவை முறையே, 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் என்ற வகைப்பாட்டில் வழங்கப்படவுள்ளன.

3 ஆண்டு உதவித்தொகை திட்டத்தின் கீழ், பின்வரும் துறைகளில் படிப்புகள் வழங்கப்படும். தொழில்நுட்பம், பெர்சனல் கேர் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் நலவாழ்வு, வணிகம், பேஷன் மற்றும் வீட்டுப் பொருளாதாரம், பண்பாடு மற்றும் பொதுக் கல்வி மற்றும் இதர துறைகள்.

தகுதி

மேற்கண்ட உதவித்தொகையைப் பெற விரும்புவோர், 1993ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல், 1998ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு இடைபட்ட காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

பள்ளிக் கல்வியில் மேல்நிலைப் படிப்பை ரெகுலர் முறையில் நிறைவுசெய்திருக்க வேண்டும். ஜப்பான் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்க, 11ம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது.

ஜப்பான் நாட்டில் கற்க விரும்பும் மாணவர்கள், 1 ஆண்டு ஜப்பான் மொழிப் படிப்பை மேற்கொள்வதற்கு ஆர்வம் கொண்டிருப்பது அவசியம். அதன்பிறகு, அவர் தனது படிப்பை மேற்கொள்வார்.

தேர்வுசெய்யும் முறை

சென்னையிலுள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தில் நடத்தப்படும் தேர்வை எழுத வேண்டும். தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் குறித்த விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இத்தேர்வை எழுத, ஜப்பானிய மொழித்திறன் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
இறுதி மாணவர் தேர்வு செயல்பாடு, MEXT -ஆல் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள் கல்வி நிறுவனம் அல்லது பல்கலையின் பெயரோடு, 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

www.studyjapan.go.jp/en/toj0307e.html#1 என்ற வலைதளம் சென்று, விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். 044 - 24323860 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, மேலதிக விபரங்களைப் பெறலாம்.

விண்ணப்பிக்கும் இறுதி தேதி - ஜுன் 20.

Scholarship :  வெளிநாட்டு மாணவர்களுக்கு ஜப்பான் வழங்கும் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us