சட்டப்படிப்புகளுக்கு கல்வித் தகுதி

எழுத்தின் அளவு :

Print

தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் பி.ஏ., பி.எல்., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேர, தேவையான கல்வித் தகுதி விபரம்:

1. பி.ஏ., பி.எல்., (5 ஆண்டுகள்)
பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுத்திருக்க வேண்டும். சேர்க்கைக்கான தேர்வின் போது மொழிப்பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறைந்தது 40 சதவீத மதிப் பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.  பணியில் உள்ளவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க இயலாது.

2. பி.ஏ., பி.எல்., ஹானர்ஸ் (5 ஆண்டுகள்)
பிளஸ் 2வில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறைந்தது 60 சதவீத மதிப் பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us