கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கல்வித் தகுதி

எழுத்தின் அளவு :

Print

தமிழக அரசு கல்லூரி கல்வித்துறையின் விதிமுறைகளின் படி, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும். என்றாலும் கல்லூரி முதல்வர், கல்லூரியின் மூத்த தேர்வு நிலை விரிவுரையாளர்கள், இணைப்பேராசிரியர் கொண்ட கமிட்டி பெற்ற விண்ணப்பங்கள் அடிப்படையில், ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக தகுதி உடைய மாணவர்களை படிப்பில் சேர்க்கிறது.

வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் வரம்புகளின் கீழ், அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரி, சிறுபான்மை கல்லூரி, சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2வில் மாணவர் பெற்ற மதிப்பெண்களை கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி 210 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு மாணவர்களின் தரவரிசை நிர்ணயிக்கப்படும்.  பட்டப்படிப்பில் மாணவர் சேர விரும்பும் அதே பாடத்தில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண்களே மாணவரின்  தரவரிசை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விண்ணப்பதாரர்கள் அவர்கள் பிளஸ்2வில் எடுத்த பாடங்கள் அடிப்படையில் 5 வகையினராக பிரிக்கப்படுகிறார்கள். கல்லூரியில் சிலப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்வதற்கு அதே பாடத்தை பிளஸ் 2வில் படித்திருந்தால் மட்டுமே சேர முடியும். உதாரணமாக கணிதம். பிளஸ் 2வில் எந்த பாடப்பிரிவு எடுத்திருந்தாலும் சில பட்டப்படிப்புகளை படிக்க முடியும் உதாரணமாக  இதழியல், உளவியல். இவ்வாறு வித்தியாசப்படும் பாடப்பிரிவுகளில் விண்ணப்பம் செய்த மாணவர்களை தரவரிசை  கீழ்க்கண்ட 5 வகையாக பிரிக்கப்படுகிறது.

1.கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப் பாடங்களை பிளஸ் 2வில் படித்திருப்பவர்.(தேர்வு செய்யும் முக்கிய  மெயின் பாடப்பிரிவில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண் 100மதிப்பெண்ணுக்கு  கணக்கிடப்படும். துணைப்பாடங்கள் இரண்டுக்கும் தலா 50 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும்.)

2.கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப்பாடங்களில் ஏதேனும் ஒன்றை பிளஸ் 2வில் படித்திருப்பவர். (தேர்வு செய்யும் முக்கிய பாடப்பிரிவில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். துணைப்பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்ணுக்கு  கணக்கிடப்படும்.)

3.துணைப்பாடங்கள் இரண்டையும் பிளஸ் 2வில் படித்திருப்பவர்.  (தேர்வு செய்யும் துணைப்பாடங்கள் பிரிவுகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 100 மதிப்பெண்)

4.முக்கிய பாடம் அல்லது ஏதாவது ஒரு துணைப்பாடத்தை படித்திருப்பவர். (முக்கிய பாடம் அல்லது துணைப்பாடத்தில் 100 மற்றும் மூன்றாம் பிரிவு பாடங்களில் செயல்முறை தேர்வு இல்லாமல் 100)

5.கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப்பாடங்களை பிளஸ் 2வில் படிக்காதவர். (மூன்றாம் பிரிவு பாடங்களில், செயல்முறைத் தேர்வு இல்லாமல் 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்.)

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us