ராஜீவ்காந்தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், ஷிலாங்

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.எம்.,ஷிலாங் 2008 ம் ஆண்டு வடக்கிழக்கு மாநிலத்தில் தொடங்கப்பட்ட முதல் ஐ.ஐ.எம். ஆகும். மறைந்த முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக இந்த நிறுவனத்துக்கு ராஜீவ் காந்தி இந்தியன் இன்ஸ்டிடியூட்ஆப் மேனேஜ்மென்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஏழாவது ஐ.ஐ.எம்., ஆகும். தற்காலிகமாக  மயூர்பஞ் வளாகத்தில் இந்த நிறுவனம் செயல்ப்பட்டு வருகிறது. 120 ஏக்கர் பரப்பளவில் அமைதியான சூழலில் ஷிலாங் நகரத்தின் மத்தியில் நிரந்தர வளாகம் அமைக்க பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

வகுப்பறை, நூலகம், இன்டர்நெட், விடுதி, விளையாட்டு மைதானம், உடற் பயிற்சி கூடம், மருத்துவ வசதி என மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த நிறுவன வளாகத்திலே அமைந்துள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் (2 வருடம்)
மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் புரோகிராம் (2 நாள் முதல் 6 வரம் வரை)

வழங்கப்படவுள்ள படிப்புகள்:
செனட்டர் பார் டெவலப்மென்ட் ஆப் நார்த் ஈஸ்டர்ன் ரீஜியன்
ரீடைல் மேனேஜ்மென்ட்
ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்
பிசினஸ் ஸ்கில் பார் சுமால் பிசினஸ்
ஒர்க்ஷாப் ஆன் எப்பக்டிவ் மேனேஜ்மென்ட்
தொழில்முனைவோர் மேம்பாட்டு படிப்பு

கட்டணம்:
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் - ரூ 2,50,000

தொடர்பு கொள்ள:
ராஜீவ்காந்தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் , ஷிலாங்
மயூர்பஞ் வளாகம்,
நாங்தமை ஷிலாங் 793014
போன்: 0364 2308005, 2308000
இமெயில்: director@iimshilong.in
வெப்சைட்: www.iimshillong.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us