நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, துர்காபூர்

எழுத்தின் அளவு :

கடந்த 1960ம் ஆண்டு நிறுவப்பட்ட மண்டல பொறியியல் கல்லூரி (ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ்), தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக மலர்ந்துள்ளது. பொறியியல் கல்வியை அனைத்து தரப்பினருக்கும் வழங்கி தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வகையில் துவக்கப்பட்ட இதுபோன்ற என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. 187 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனத்தில் 7 மாணவர் விடுதிகளும், இரண்டு மாணவியர் விடுதிகளும் உள்ளன.

இங்கு 2,200 மாணவர்கள், 400 மாணவியர்கள் கல்விபெறும் நிலையில், ஆண்டுதோறும் 550 மாணவர்கள் இளநிலை பட்டம் பெறுகின்றனர். பி.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.டெக்., மற்றும் ஆராய்ச்சி (பி.எச்.டி.,) படிப்புகளை இக்கல்வி நிறுவனம் வழங்கிவருகிறது.


இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
பயோ டெக்னாலஜி
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
இன்பர்மேஷ்ன் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள்: (எம்.டெக்.,)
புரொடக்ஷன் ஆப் பெர்ட்டிலைசர்
ஸ்டரச்சுரல் இன்ஜினியரிங்
இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங்
டிசைன் மற்றும் புரொடக்ஷன் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் சேப்பிங் ஆப் மெட்டல்ஸ்
எக்ஸ்ட்ராக்டிவ் மெட்டலார்ஜி மற்றும் பவுண்டரி
கொரோசன் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி
ஆப்ரேஷன்ஸ் ரிசர்ச் இன்டஸ்ட்ரி
அட்வான்ஸ்டு மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி

எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,
பி.எச்.டி.,

 

தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
துர்காபூர் 713 209, மேற்கு வங்கம்
தொலைபேசி:  +91 343 2546397
பேக்ஸ்: +91 343 2547375

இ-மெயில்: director@nitdgp.ac.in
வெப்சைட்: www.nitdgp.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us