என் பெயர் மருதுபாண்டி. நான் பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. தற்போது, எம்.சி.ஏ படித்து வருகிறேன். இந்தப் பட்டங்களின் தகுதியுடன், டெல்லியிலுள்ள தேசிய பிசிகல் லெபாரட்டரியில்(என்.பி.எல்) நுழைய முடியுமா? | Kalvimalar - News

என் பெயர் மருதுபாண்டி. நான் பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. தற்போது, எம்.சி.ஏ படித்து வருகிறேன். இந்தப் பட்டங்களின் தகுதியுடன், டெல்லியிலுள்ள தேசிய பிசிகல் லெபாரட்டரியில்(என்.பி.எல்) நுழைய முடியுமா?மார்ச் 14,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

முதுநிலைப் பட்டம் அல்லது மூன்றாம் நிலைப் பட்டம் பெற்றுள்ள அறிவியல் பட்டதாரிகளை, பல நிலைகளில், NPL எடுத்துக்கொள்கிறது. கணிப்பொறி அறிவியல் துறையில் அதிக ஆர்வம் கொண்டு, எம்.எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்பை, Institute of mathematics - Chennai, Indian Statistical Institute - Bangalore, Tata Institute of Fundamental sciences - Mumbai போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் முடித்தவர்களுக்கு, NPL -ல் சிறப்பான முன்னுரிமை கிடைக்கிறது.

இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள், ஆட்டோமிக் எனர்ஜி, DRDO போன்ற உதவித்தொகை வழங்கும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வாய்ப்புகளை வழங்குவதுடன், IBM, Microsoft, GE போன்ற நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பிரிவுகளிலும் வாய்ப்புகளை வழங்குகின்றன.

எனவே, உங்களது ஆர்வத்தையும், திறமையையும் மதிப்பிட்டு, அதற்கேற்றாற்போல், உயர்கல்வியை மேற்கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us