அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு | Kalvimalar - News

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு

எழுத்தின் அளவு :

1.அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு  ஏ.ஐ.இ.இ.இ., எதற்காக நடத்தப்படுகிறது?
தேசிய அளவில் முக்கியத்துவம் வாயந்த தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களான என்.ஐ.டி.,களில் இன்ஜினியரிங்கில் சேர்வதற்கு இந்த நுழைவுத் தேர்வு அவசியம். தவிர, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய மற்றும் மாநில முக்கியத்துவம் வாயந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு இத்தேர்வை எழுத வேண்டும்.

2.ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் எந்தெந்த பாடங்கள் இடம்பெறும்?
இந்த நுழைவுத் தேர்வின் முதல் தாளில் இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய பகுதிகளில் தலா 40 வினாக்களுடன் மொத்தம் 120 வினாக்கள் இடம்பெறும். பி.ஆர்க்., பி.டிசைன் ஆகிய கட்டடக்கலை படிப்புகளை எழுத விரும்புவோர் இரண்டாம் தாள் எழுத வேண்டும்.

3. தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படுமா?
சரியான விடைக்கு 3 மதிப்பெண்களும் தவறான விடைக்கு ஒரு மதிப்பெண்ணும் குறைக்கப்படும்.

4. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயின்றவர் மட்டுமே இத்தேர்வில் தேற முடியுமா?
சி.பி.எஸ்.இ., படித்தவர்களுக்கு இப்பாடம் எளிதாக இருக்கலாம். ஆனால், அப்பாடத்திட்டத்தில் பயிலாத மாணவர்களும் நன்றாக தேர்ச்சி அடைந்து வருகிறார்கள். தற்போது சீரமைக்கப்பட்ட பாடத்திட்டத்தால் இப்பிரச்னை குறைந்துள்ளது.

5.இந்த தேர்வுக்கு எப்படி தயாராவது?
இதற்கான மாதிரித் தேர்வுகளை எழுதிப் பழக வேண்டும். இதனால், தேர்வில் விடையளிப்பது மிக எளிதாக இருக்கும். பிளஸ் 2 பாடப்புத்தகங்களுடன் உரிய புத்தகங்களையும் படித்து தேவையான பாட விஷயங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

6. இந்த தேர்வின் மூலம் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கிறது?
இன்ஜினியரிங் கல்லூரிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் பயன்பெற்றார்கள்.

7.கட்டடக்கலைக்கு தனித்தேர்வு எழுத வேண்டுமா?
ஆம். இரண்டாம் தாள் எழுத வேண்டும். இத்தேர்வை எழுதுவோர் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பி.ஆர்க்., மற்றும் பி.டிசைன் படிப்புகளில் சேர முடியும்.

8. ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு எழுதினாலும் கட்டடக்கலை படிப்புக்கு National Aptitude Test in Architecture(NATAதேர்வு எழுத வேண்டுமா?
தேவை இல்லை. கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் (சி.ஓ.ஏ.,) கட்டடக்கலை படிப்பு சேர்க்கைக்கு இவ்விரு தேர்வுகளை மட்டுமே அங்கீகரித்துள்ளது. ஆகவே, இதில் ஏதாவது ஒன்றை எழுதினால் போதுமானது.

9.ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு எப்போது முதல் நடத்தப்பட்டு வருகிறது?
1986ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

10.எத்தனை தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்?
நாடுமுழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us