அமெரிக்காவில் படிக்க உதவித்தொகை | Kalvimalar - News

அமெரிக்காவில் படிக்க உதவித்தொகைஏப்ரல் 05,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்களின் அயல்நாட்டு உயர்கல்வி கனவை மெய்ப்பிப்பதற்காக அமெரிக்க - இந்தியக் கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) சார்பாக முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டமே இது!



புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் பெலோஷிப்:


அமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பைத் படிக்க விரும்பும் தகுதியான இந்திய மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.



தகுதிகள்:


 அங்கீகரிக்கப்பட்ட இந்தியக் கல்வி நிறுவனத்தில் இளநிலை அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பை குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக நான்கு ஆண்டு இளநிலை படிப்பைப் படித்தவராக இருக்க வேண்டும். அதற்குக் குறைவான கால அளவை கொண்ட படிப்பு என்றால் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்திருக்க வேண்டியது அவசியம்.



 துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 3 ஆண்டு முழுநேர பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.


 தலைமைத்துவம் அனுபவம் இருப்பது அவசியம்.


 இதற்கு முன் அமெரிக்காவில் எந்த உயர்கல்வியும் படித்திருக்கக் கூடாது.



பிரிவுகள்:


குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் கீழ் முதுநிலைப் பட்டப் படிப்பைப் பயில விரும்பும் மாணவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அவை,


 கலாச்சார பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக ஆய்வுகள் உட்படக் கலை படிப்புகள்


 பொருளாதாரம்


 சுற்றுச்சூழல் அறிவியல்


 உயர் கல்வி நிர்வாகம்


 சர்வதேச விவகாரம்


 சர்வதேச சட்டம்


 பொது நிர்வாகம்


 பொது சுகாதாரம்


 நகர்ப்புறம் மற்றும் பிராந்திய திட்டமிடல்


 மகளிர் மற்றும் பாலினம் 



உதவித்தொகைகள் மற்றும் சலுகைகள்:


 தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜே- 1 விசா 


 அமெரிக்க வந்து செல்வதற்கான விமான பயணச் சீட்டு 


 கல்விக் கட்டணம் மற்றும் தங்கும் வசதி



விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாக படித்து குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சரியாக இணைக்க வேண்டியது அவசியம்.



விபரங்களுக்கு: http://www.usief.org.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us