நெதர்லாந்தின் ஓ.டி.எஸ்., உதவித்தொகை | Kalvimalar - News

நெதர்லாந்தின் ஓ.டி.எஸ்., உதவித்தொகைடிசம்பர் 30,2019,14:11 IST

எழுத்தின் அளவு :

நெதர்லாந்தில் படிக்க விரும்பும் இந்தியாவின் திறமை வாய்ந்த மாணவர்களுக்கு ஆரஞ்ச் துளிப் ஸ்காலர்ஷிப் (ஓ.டிஎஸ்.,) திட்டத்தின் கீழ், பல்வேறு உதவித்தொகை வாய்ப்புகளை, நெதர்லாந்து உயர்கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.



அறிவியல், மேலாண்மை, பொருளாதாரம், கலை, பொறியியல், மருத்துவம் என பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் உதவித்தொகைகளை நெதர்லாந்து கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்களுக்கு வழங்குகின்றன. உதவித்தொகையும், வழங்கப்படும் காலமும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது.



கல்வி நிறுவனங்கள்:


 * யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் (எக்னாமிக்ஸ் அண்ட் பிசினஸ்) 


* விரிஜி யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம்


* ரட்பவுட் யுனிவர்சிட்டி


* ரொட்டர்டாம் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்


* கிரோனின்கென் யுனிவர்சிட்டி 


* ஹான் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ்


* மாஸ்ச்டிரிச் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்


* மாஸ்ச்டிரிச் யுனிவர்சிட்டி


* விட்டென்பொர்க் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ்


* டில்பெர்க் யுனிவர்சிட்டி


* தி ஹக்யு யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ்


* சாக்சின் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ்


* இன்ஸ்டிடியூட் ஆப் ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலெப்மெண்ட்


* யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் பிசினஸ் ஸ்கூல்-எம்.ஐ.எப்.,


* ஹான்ஸ் யுனிவரிசிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ்


* ரோட்டர்டாம் பிசினஸ் ஸ்கூல்


* இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் ஸ்டடீஸ் (ஐ.எஸ்.எஸ்.,)


* போண்ட்ஸ் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ்


* ஆம்ஸ்டர்டம் யுனிவர்சிட்டி ஆப் ஆர்ட்ஸ் (டி.ஏ.எஸ்., தியேட்டர் மாஸ்டர்ஸ்)


* டுவெண்டி யுனிவர்சிட்டி


* டியாஸ் பிசினஸ் ஸ்கூல்



தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். நெதர்லாந்து கல்வி நிறுவனங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருப்பவர்கள் அல்லது சேர்க்கைக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் ஓ.டி.எஸ்., உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.



உதவித்தொகை விபரம்: மாணவர்களது கல்விக்கட்டணத்தில், 100 சதவீதம் முதல் 25 சதவீதம் அளவிற்கு உதவித்தொகை வழங்கப்படும்.



விபரங்களுக்கு: www.nesoindia.org



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us