இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச் | Kalvimalar - News

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச்மே 11,2021,20:21 IST

எழுத்தின் அளவு :

அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் வாயிலாக சமூக சவால்களுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டு செயல்படும்  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம்!



விஞ்ஞான ஆராய்ச்சிகளில் மாணவர்களின் படைப்பு சிந்தனை திறன்களை ஊக்குவிக்கும் வகையிலான பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதோடு, அறிவியல் ஆராய்ச்சியில் மாணவர்கள் மேம்பட அதிநவீன தொழில்நுட்ப அய்வுக் கூடங்கள், நூலகங்கள் மற்றும் சிறந்த சுற்றுச்சூழலை இக்கல்வி நிறுவனத்தின் 7 மையங்களும் கொண்டுள்ளன. 



கல்வி மையங்கள்


பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொகாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி 



வழங்கப்படும் படிப்புகள்


பி.எஸ்.எம்.எஸ்., - 5 ஆண்டுகள்



பிரிவுகள்


* பயோலஜிக்கல் சயின்சஸ்


* கெமிக்கல் சயின்சஸ்


* எர்த் அண்டு கிளைமேட் சயின்சஸ் / எர்த் அண்டு என்விரான்மெண்டல் சயின்சஸ்


* இன்ஜினியரிங் சயின்சஸ் - கெமிக்கல் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்


* ஜியாலஜிக்கல் சயின்சஸ்


* இன்டக்ரேட்டர்டு அண்டு இன்டர்டிசிப்ளினரி சயின்சஸ் - பயோலஜிக்கல் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ், டேட்டா சயின்சஸ், மேத்மெடிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ்


* மேத்மெடிக்கல் சயின்சஸ்


* பிசிக்கல் சயின்சஸ்



ஆராய்ச்சி படிப்புகள்


எம்.எஸ்., பிஎச்.டி., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி., மற்றும் போஸ்டு டாக்டோரல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.



தகுதிகள்


10 செமஸ்டர்கள் கொண்ட பி.எஸ் - எம்.எஸ்., படிப்பில், முதல் இரண்டு ஆண்டில், அறிவியல் பாடப்பிரிவில் உள்ள அடிப்படை அறிவியல் நுணுக்கங்கள் கற்று தரப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில், அறிவியல் துறையில் உள்ள ஏதேனும் ஒரு பாடப்பிரிவை முதன்மை படிப்பாக தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். ஐந்தாம் ஆண்டு முழுவதும் முழுநேர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.



அடிப்படைத் தகுதி


பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



சேர்க்கை முறை


மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் நடத்தப்படும் கே.வி.பி.ஒய்., என்ற தேசிய அறிவியல் உதவித்தொகை தகுதி தேர்வில் தேர்ச்சி அல்லது ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு மதிப்பெண் அல்லது மத்திய / மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் ஆகிய மூன்று பிரிவுகள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்கள், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., ஆப்டிடியூட் டெஸ்ட்-ல் தேர்ச்சி பெறுவது அவசியம்.



முதுநிலை மற்றும் ஆராய்ச்சி


எம்.எஸ்., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி., அல்லது பிஎச்.டி., பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.பி.பி.எஸ்., அல்லது அதற்கு இணையான  இளநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.



விபரங்களுக்கு: www.iiseradmission.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us