ஜெர்மனியில் படிக்க உதவித்தொகை! | Kalvimalar - News

ஜெர்மனியில் படிக்க உதவித்தொகை!

எழுத்தின் அளவு :

ஜெர்மனி பல்கலைக்கழங்களில் படிக்க விரும்புபவர்களுக்கு ஜெர்மன் அகாடமிக் எக்ஸ்சேன்ஜ் சர்வீஸ் உதவித்தொகை அறிவித்துள்ளது.

பொருளாதார அறிவியல், நிர்வாகம், அரசியல் அறிவியல், கூட்டுறவு, பொறியியல், கணிதம், ரீஜினல் பிளானிங், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண்மை, வன அறிவியல், பொது சுகாதாரம், கால்நடை மருத்துவம், கல்வி மற்றும் சமூகம் ஆகிய துறைகள் சம்பந்தப்பட்ட 42 விதமான படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பொருளாதார, தொழில்நுட்ப, சமூக வளர்ச்சி சம்பந்தப்பட்ட வளர்ச்சி திட்டம் சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் புரொபஷனல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளில் படிப்புகளை மேற்கொள்ளலாம். போதிய அடிப்படை ஜெர்மான் மொழி அறிவு அவசியம். ஜெர்மான் மொழி படிப்பதற்காக அந்நாட்டு அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஆங்கில மொழியிலான படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தனது கல்வியை தொடர்வதற்கு முன்னதாக, இரண்டுமாத ஜெர்மான் மொழி படிப்பிற்கான உதவித்தொகை வழங்கப்படும். ஜெர்மனியில் முதுநிலை பட்டப்படிப்பு பெற உள்ளவர்கள் முன்னதாக, ஜெர்மான் மொழியை படிப்பதற்கான 6 மாத உதவித்தொகையை பெறுவார்கள்.

36 வயது வரையிலான மாணவர்கள் தங்களது கல்விக்கான முழு அல்லது பகுதி வாரியான உதவித்தொகையை பெறுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தங்களது சொந்த நிதியின் மூலமாகவும், சொந்த நாட்டின் அரசாங்க நிதியுதவி, சர்வதேச அமைப்புகளிடம் பெறப்படும் நிதியுதவியின் மூலமாகவும் படிக்கலாம்.

டெல்லியில் உள்ள டேட் மையத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. www.daad.de/deutschland/download/03118.en.html என்ற இணையதள முகவரியில் இருந்தும் டவுன்லோடு செய்துகொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 31-08-2008.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us