மத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம் | Kalvimalar - News

மத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம்ஜூலை 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

அறிமுகம்:

மத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம்(சி.எஸ்..), அறிவியல் மற்றும் தொழிற்சாலை உபகரணங்கள் சம்பந்தமான ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாடு சம்பந்தமான பணிகளை மேற்கொள்கிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் முக்கியமான ஆய்வகங்களுள் இதுவும் ஒன்று. கடந்த 1959 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், முதலில் டெல்லியில் அமைக்கப்பட்டது. பின்னர் 1962 -இல் சண்டிகருக்கு மற்றப்பட்டது. புதிய வளாகத்தில் பல புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

நோக்கம்:

அறிவியல் மற்றும் உபகரண சாதனங்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் தேசிய அளவில் தலைமை நிறுவனமாக இருப்பதோடு, நாடு முழுவதும் அது சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு கண்காணிப்பாளராக இருந்து, அந்த பணிகளின் ரிப்பேர், பராமரிப்பு மற்றும் கணக்கிடுதல் போன்ற சேவைகளை வழங்குவதாகும்.

இந்த கல்வி நிறுவனத்தில் பல நிலைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றைப் பற்றிய தகவலை இங்கே விரிவாக தருகிறோம்.

இளநிலை பொறியியல் மாணவர்களுக்கான 6 மாதகால பயிற்சி:

இந்த பயிற்சிக்கு பொறியியல்/எம்.எஸ்சி./எம்.சி.. அல்லது அதற்கு சமமான தகுதியுள்ள மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். டிப்ளமோ மாணவர்களுக்கு இதில் வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு வருடமும் ஜனவரி & ஜூலை மாதங்களில், குறைந்தளவிலான எண்ணிக்கை கொண்ட மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

* எம்../எம்.டெக். படித்த மாணவர்களுக்கான சிறப்பான பயிற்சி இங்கே வழங்கப்படுகிறது.

* ஒரு வருட பட்டதாரிகளுக்கான வேலை பயிற்சி:

பொறியியல் மாணவர்கள் மற்றும் அதற்கு சமமானவர்கள் மட்டுமே இதற்கு தகுதியுடையவர்கள். இதில் கலந்துகொள்பவர்களுக்கு மாதம் ரூ.2600 உதவித்தொகை வழங்கப்படும்.

குறைவான இடங்களுக்கான இந்த பயிற்சி, வருடத்தின் எந்த மாதமும் தொடங்கும்.

டிப்ளமோ படித்தவர்களுக்கான ஒரு வருட வேலை பயிற்சி:

பொறியியலில் 3 வருட டிப்ளமோ படித்தவர்கள் அல்லது அதற்கு சமமாக படித்தவர்கள் மட்டுமே இதில் சேரலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1850 உதவித்தொகை வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

குறைவான இடங்களே இப்பயிற்சியில் உள்ளன.

வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் இப்பயிற்சி தொடங்கும்.

.டி.. முடித்தவர்களுக்கான ஒரு வருட வேலை பயிற்சி:

2 வருட .டி.. படித்தவர்கள் மட்டுமே இதற்கு தகுதி.

குறைவான இடங்களே இப்பயிற்சியில் உள்ளன.

வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் இப்பயிற்சி தொடங்கும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

10 ,12 வகுப்புகள் தேறியவர்களுக்கான ஒரு வருட தொழில்முறை வேலை பயிற்சி:

பள்ளி படிப்பில் தொழில் பாடங்களை படித்தவர்களுக்கே இந்த வாய்ப்பு.

குறைவான இடங்களே இப்பயிற்சியில் உள்ளன.

வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் இப்பயிற்சி தொடங்கும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

சாதனைகள்:

தொழில்நுட்ப துறையில் ஏராளமான சாதனைகளை இந்நிறுவனம் புரிந்துள்ளது.

* மைக்ரோஎலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்டேஷன்

* ஜியோசயின்டிபிக் இன்ஸ்ட்ரூமென்டேஷன்

* மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன்

* அக்ரிஎலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்டேஷன்

* அனலிடிக் இன்ஸ்ட்ரூமென்டேஷன்

* ப்ராசஸ் கண்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்டேஷன்

* டிரான்ஸ்போர்டேஷன் இன்ஸ்ட்ரூமென்டேஷன்

போன்றவை மட்டுமல்லாது,

தொழிற்சாலைகளுக்கு தொழில்நுட்பங்களை வழங்குதல், பயனருக்கு தேவைப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் இந்நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.

இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள, www.csio.res.in என்ற வலைத்தளத்திற்குள் செல்லவும்.

 

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us