தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் | Kalvimalar - News

தேசிய கடலாராய்ச்சி நிறுவனம்ஜூலை 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

அறிமுகம்:

என்... எனப்படும் கடலாராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் கோவாவில் அமைந்துள்ளது. கோவாவில் தலைமையகத்தை கொண்ட இந்நிறுவனம், மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் மண்டல மையங்களைக் கொண்டுள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ்வரும் நாட்டின் 38 பிரதான ஆய்வகங்களுள் என்... -ம் ஒன்று. கடந்த 1966, ஜனவரி 1 -இல் என்.. ஏற்படுத்தப்பட்டது. இன்றைய நிலையில் இந்த நிறுவனம் கடலாராய்ச்சி துறையில் உலகப் புகழ்பெற்று விளங்குகிறது.

ஆய்வுகள்:

கடல் சம்பந்தமான சிறப்பு அம்சங்களை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது. அந்த ஆய்வுகளின்படியான அனுமான முடிவுகள் 5000௦௦௦ ஆய்வு கட்டுரைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வகத்தில் 200 விஞ்ஞானிகள் மற்றும் 100 தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். கடலாராய்ச்சியின் 4 பாரம்பரிய துறைகளான உயிரியல், வேதியியல், ஜியலாஜி, ஜியோபிசிக்ஸ் போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதோடு, தொல்பொருளியல் மற்றும் மரைன் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் போன்றவற்றிலும் ஆராய்சிகள் நடத்தப்படுகின்றன. இங்குள்ள ஆய்வகம் மிகச் சிறப்பான வசதிகளை கொண்டது.

அடிப்படை ஆய்வுகளோடு, தொழில்துறையிலிருந்து வரும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தொழில்துறை ஆய்வுகளில் கடலாராய்ச்சி தரவு சேகரிப்பு, சூழல் பாதிப்பு அளவீடு, சூழல் பாதிப்பை கணித்தல் போன்றவை அடங்கும். மேலும் கடல் சூழல் பாதுகாப்பு மாற்றம் கடற்கரை மண்டல முறைப்படுத்தல் போன்றவை உள்ளிட்ட பல விஷயங்களில் ஆலோசனைகளையும் வழங்குகின்றன.

மாணவர் பாடத்திட்டங்கள்:

தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு. அதேசமயம் தேசிய கடலாராய்ச்சி நிறுவனத்தில்(என்..), எந்த இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படவில்லை. அதேபோல் வேலைக்கான எந்த பயிற்சி பாடத்திட்டங்களும் இல்லை.

அதேசமயம் கடலாராய்ச்சி சம்பந்தமான பி.எச்டி பட்டத்திற்கான கட்டுரைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட படிப்பின்போதான பயிற்சி போன்றவைகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்நிறுவனத்தில் வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் படிப்பின்போதான பயிற்சிக்காக இங்கே கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. மாணவர்களின் ஆய்வுக்கான ஆய்வக செலவுகள் (என்..) நிதியின் மூலமாகவே சரிசெய்யப்படுகின்றன. அதேசமயம் தங்களின் வாழ்க்கை மற்றும் போக்குவரத்து செலவுகளை மாணவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவசர தேவைக்கான இலவச மருத்துவ ஆலோசனைகள் இங்கு கிடைக்கும். ஆனால் மருத்துவமனை செலவுகள் மற்றும் பிற சிகிச்சை செலவுகளை மாணவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கான வாய்ப்புகள்:

*  கோடைகால படிப்பின்போதான பயிற்சிகள் (ஒவ்வொரு வருடமும் மே முதல் ஜூலை வரை) - இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

பி.எச்டி பட்டத்திற்கான ஆய்வு கட்டுரை பிராஜெக்டுகள் (ஒரு வருடத்தில் மே முதல் ஜூலை வரையிலான மாதங்கள் தவிர, பிற மாதங்களில்)

மேலும் இவைத்தவிர கோவா மற்றும் பிறப்பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கான பிற வாய்ப்புகள்:

மாணவர் வோர்க்ஷாப்கள் (கோவா பள்ளி மாணவர்களுக்கானது) - எஸ்.எஸ்.சி அல்லது சி.பி.எஸ்.சி தேர்வுகளில் கோவாவில் முதல் 120  இடங்களுக்குள் வந்த மாணவர்களுக்கு இதில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்படும்.

கல்விக்கான வருகை (நாட்டின் அனைத்து பகுதி மாணவர்களுக்கானது) - அனைத்து வேலை நாட்களிலும் இதற்கு அனுமதி உண்டு. அதேசமயம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அனுமதி பெற்றால், வருகை சிறப்பாக அமைய முன்னேற்பாடுகள் செய்யப்படும்.

இந்த கோடைகால படிப்பின்போதான பயிற்சிகள் மற்றும் பி.எச்டி பட்டத்திற்கான ஆய்வு கட்டுரை பிராஜெக்டுகள் போன்றவை, ஒரு மாணவர் கடலாராய்ச்சி படிப்பு மற்றும் ஆய்வு முறைகளின் பலவித அம்சங்களையும் தெரிந்துகொள்ளும் பொருட்டு நடத்தப்படுகிறது. மேலும் அதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் குறித்தும் நிறைய வழிகாட்டுதல்கள் உள்ளன. எனவே இந்த பயிற்சிகளில் சேர்வதற்கான நடைமுறைகள் மற்றும் மாணவர் வசதிக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வதற்கு www.nio.org என்ற வலைதளத்தில் செல்லவும்.

முனைவர் பட்ட படிப்புகள்:

சி.எஸ்..ஆர்/யு.ஜி.சி நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரிகள் இந்த கல்வி நிறுவனத்தில் பி.எச்டி. ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தவகை மாணவர்கள் ஜே.ஆர்.எப்(ஜூனியர் ரிசர்ச் பெல்லோஸ்) அல்லது எஸ்.ஆர்.எப்(சீனியர் ரிசர்ச் பெல்லோஸ்) என்று குறிப்பிடப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உதவித்தொகை பெறுகிறார்கள் மற்றும் இவர்கள் பெறும் பிற உதவிகள் சி.எஸ்..ஆர்/யு.ஜி.சி -இலிருந்து நேரடியாக கிடைக்கும். பி.எச்டி. முடித்த மாணவர்கள் ரிசர்ச் அசோசியேட்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இதைப்பற்றி மேலும் விவரங்கள் அறிய http://csirhrdg.res.in/ என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

அறிவியல் பாட பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் "நெட்" தேர்ச்சியடையாமல் இருந்தாலோ, பொறியியல் பாட பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் "கேட்" தெர்சியடையாமல் இருந்தாலோ, இந்த என்.. -வில் பி.எச்டி. ஆய்வில் ஈடுபட அனுமதி இல்லை. நெட்-எல்.எஸ். தேறிய மாணவர்கள், வேறு ஏதாவது என்... ஆய்வு திட்டங்களில் நிதியுதவி பெற்றிருந்தாலும் கூட, பி.எச்டி. ஆய்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிறுவனம் வழங்கும் பி.எச்டி. பட்டங்களை பல பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்துள்ளன.

இதற்கான விதிமுறைகள் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள www.nio.org என்ற வலைதளத்திற்கு சென்று விவரங்களை பெறவும்.

கடலாராய்ச்சி சம்பந்தமான படிப்புகள்:

என்... தன்னளவில் எந்த இளநிலை/முதுநிலை/டிப்ளமோ படிப்புகளையோ அல்லது ரெகுலரான வேலை பயிற்சி படிப்புகளையோ நடத்துவதில்லை. ஆனால் பலர், என்... -இல் இத்தகைய படிப்புகள் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு உதவும்பொருட்டு, கடலாய்வு சம்பந்தமான படிப்புகளை கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை தருகிறோம்.

ஆந்திர பலகலைக்கழகம் - விசாகப்பட்டினம், ஆந்திரா

அண்ணா பல்கலைக்கழகம் - சென்னை

அண்ணாமலை பல்கலைக்கழகம் - பரங்கிபேட்டை, தமிழ்நாடு

பாபாசாஹேப் அம்பேத்கர் மரத்வாடா பல்கலைக்கழகம் - ரத்னகிரி, மகாராஷ்டிரா.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் - திருச்சி, தமிழ்நாடு

பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம் - பெர்ஹாம்பூர், ஒரிசா

கல்கத்தா பல்கலைக்கழகம் - கொல்கத்தா

சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் எஜுகேஷன் - மும்பை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கொச்சின் பல்கலைக்கழகம் - கொச்சி

கோவா பல்கலைக்கழகம் - கோவா

கொகேட் ஜோகால்கர் கல்லூரி - ரத்னகிரி, மகாராஷ்டிரா

..டி - டெல்லி

..டி - காரக்பூர்

..டி - சென்னை

இன்லேன்ட் பிஷரீஸ் யூனிட் - பெங்களூர்

கர்நாடக பல்கலைக்கழகம் - கார்வார், கர்நாடகா

கேரளா விவசாய பல்கலைக்கழகம் - எர்ணாகுளம்

மங்களூர் பல்கலைக்கழகம் - கர்நாடகா

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் - தூத்துக்குடி

விவசாய அறிவியல் பல்கலைக்கழகம் - மங்களூர், கர்நாடகா

கேரளா பல்கலைக்கழகம் - திருவனந்தபுரம்

சென்னை பல்கலைக்கழகம் - சென்னை

உத்கல் பல்கலைக்கழகம் - புவனேஸ்வர்

இத்தகைய கல்வி நிறுவனங்களை தவிர, கடலாய்வு சம்பந்தமான பல ஆராய்ச்சி&மேம்பாட்டு நிறுவனங்களும், கண்காணிப்பு ஏஜென்சிகளும் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக தகவல் அறிய www.nio.org என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us