விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் எனது மகனை சேர்க்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு குறித்த தகவல்களையும் அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா? | Kalvimalar - News

விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் எனது மகனை சேர்க்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு குறித்த தகவல்களையும் அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா?அக்டோபர் 11,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

விசுவல் மீடியா எனப்படும் துறையானது பரந்து பட்டு எண்ணற்ற பிரிவுகளில் வேலை வாய்ப்புகளையும் உற்சாகம் தரும் படிப்பையும் உறுதி செய்வதாக கடந்த சில ஆண்டுகளாக திகழ்கிறது. விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பதாகத் தான் நமது திரைப்பட ஹீரோக்கள் காட்டப்படுகிறார்கள். விஸ்காம் என்று பெருமையாக அழைக்கப்படும் படிப்பைப் படிப்பவர்களை கவனியுங்கள். அபரிமிதமான உற்சாகத்தையும் பொங்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துபவராக அவர்கள் இருப்பதைக் காணலாம்.

இத் துறையில் என்ன தான் இருக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன் ரேடியோ, திரைப்படம், டிவி பத்திரிகை என பல்வேறு வடிவங்களில் செயல்பட்டு வந்த பணிகளில் சிலவற்றை ஒன்று சேர்த்து இன்று இத் துறை படிப்பானது உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூட கூறலாம். செயற்கைக் கோள் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த பின் இன்று செயற்கைக் கோள் திரைப்பட ஒளிபரப்பு வரை பார்க்கிறோம். இது போல அசுர வேகத்தில் வளரும் இந்த மீடியாவில் சிறப்புத் திறன் பெற்றவர்களை உருவாக்கவே இப் படிப்பு வடிவமைக்கப்பட்டது.

பிரிவுகள்
விசுவல் கம்யூனிகேஷன்ஸ் என்பது பன்முகத் தன்மை கொண்ட மீடியா படிப்பாகும். இது
* கிராபிக் டிசைன்
* இல்லஸ்டிரேஷன்
* நுண் கலை
* மல்டி மீடியா
* போட்டோகிராபி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. தொழில்முறையில் இவற்றில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கும் சமாளிப்பதற்கும் இப் படிப்பு மிகவும் உதவியாக விளங்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று விசுவல் கம்யூனிகேசன்ஸ் துறையின் பயன்பாடானது பல இடங்களில் உணரப்படுகிறது. உதாரணமாக விளம்பரம் என்பது முழுக்க முழுக்க இமேஜ்களையும் ஒரு சில வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருப்பதை காண்கிறோம். இது போலவே இன்டீரியர் டிசைன், இன்டஸ்ட்ரியல் டிசைன், பப்ளிகேஷன்ஸ் டிசைன் ஆகிய துறைகளும் விசுவல் அடிப்படைகளை நம்பியிருக்கின்றன.இது போலவே புத்தகங்களுக்கான அல்லது பத்திரிகைகளுக்கான விசுவல் கம்யூனிகேஷன்ஸ் என்பது அதிகரிக்கும் முக்கியத்துவத்தைப் பெற்று வருவதை காண்கிறோம்.

பயன்படுவது யாருக்கு?
விளம்பர அதிகாரி, அனிமேட்டர், ஆர்ட் டீலர், ஆர்டிஸ்ட், டிஜிடல் ஆர்டிஸ்ட், கிராபிக் டிசைனர், இன்டீரியர் டிசைனர், வெப் ஆர்ட் டிசைனர், வெப்சைட் டிசைனர், ஆகியோர் தெரிந்தோ தெரியாமலோ விசுவல் கம்யூனிகேஷன்ஸ் அடிப்படை நுணுக்கங்களை நம்பியே இருக்கின்றனர்.

பாடத் திட்டம்
பொதுவாக இப் படிப்புக்கான பாடதிட்டத்தில் பின்வரும் அம்சங்கள் இருக்கின்றன. போட்டோகிராபிக்ஸ், பேசிக் டைப்போகிராபி, மல்டிமீடியா ஆதரிங், டெக்னிகல் டிராயிங், அட்வர்டைசிங் டிசைன், டெஸ்க்டாப் பப்ளிசிங், கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சோஷியல் பிஹேவியர் இன்டஸ்ட்ரியல் டிசைன் டைப்போ கிராபி, கிராபிக்ஸ் சிஸ்டம் மேனேஜ்மெண்ட், 3டி அனிமேஷன், ஆடியோ மற்றும் வீடியோ எடிட்டிங், இந்த படிப்பை எங்கு படிக்கலாம் என்பது ஒரு கேள்வி.

இன்று தமிழ்நாட்டில் சென்னை தவிர பிற நகரங்களிலும் இந்த படிப்பானது அதிகக் கல்லூரி களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனினும் சென்னை கல்லூரிகளே இதில் கோலோச்சுகின்றன. பிராக்டிகல் பயிற்சியை எந்த கல்லூரி தருகிறதோ அதுவே எதிர்கால வாய்ப்புகளை சிறப்பாக உருவாக்கித்தர முடியும்.

தமிழ்நாட்டு விசுவல் கம்யூனி கேஷன்ஸ் படிப்பில் அச்சு இதழியல் ஒலிபரப்பு தகவல் சாதனம் காட்சித் தகவல் சாதனம் இன்டர்நெட் இதழ்கள்
ஆகிய பிரிவுகள் உள்ளன. இவற்றில் ஒன்றை சிறப்புப் படிப்பாகப் படித்து திறன் பெறுவது முக்கியம். பிற பிரிவுகளையும் அடிப்படையில் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் டிசைனிங் என்பது இன்று எந்தத் துறைக்குமான அடிப்படை என்பதால் போட்டோசாப், இல்லஸ்டிரேட்டர், 3டி ஸ்டுடியோ, பிரீமியர், கேரக்டர் ஸ்டுடியோ, கோரல்டிரா, மார்பிங், சவுண்ட் போர்ஜ், மேக்ரோ மீடியா பிளாஸ், டைரக்டர் ஆகிய சாப்ட்வேர்களை அறிந்து கொண்டு சிறப்புத்திறன் பெற வேண்டியதும் அவசியம்.

அடிப்படையில் கலை ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் பெற்றிருப்போருக்கு இத்துறை சிறப்பான படிப்பானதாக மாறி சிறந்த வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது உண்மை தான். எனினும் பொதுவாக இப்படிப்புக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவே அறியப்படுகிறது. சுய நிதிப் படிப்பாகவே இது பொதுவாக தரப்படுகிறது. நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us