பி.காம்., முடித்த பின்பு எம்.எப்.சி., எனப்படும் மாஸ்டர் ஆப் பினான்சியல் கன்ட்ரோல் படித்து வருகிறேன். இத்துடன் கம்பெனி செகரடரிஷிப் தகுதி பெற விரும்புகிறேன். தற்போதே இதை படிக்க முடியுமா? | Kalvimalar - News

பி.காம்., முடித்த பின்பு எம்.எப்.சி., எனப்படும் மாஸ்டர் ஆப் பினான்சியல் கன்ட்ரோல் படித்து வருகிறேன். இத்துடன் கம்பெனி செகரடரிஷிப் தகுதி பெற விரும்புகிறேன். தற்போதே இதை படிக்க முடியுமா?அக்டோபர் 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

15 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான எம்.எப்.சி., எனப்படும் நிதி மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு பிரிவு படிப்பானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படிப்பு. கடந்த சில ஆண்டுகளாக நமது பொருளாதாரத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் உலகமயமாக்கலினால் தனியார் தொழில் துறை மிக வேகமாக வளர்ந்து வருவதால், இந்த படிப்பை முடிப்பவருக்கு வாய்ப்புகள் உருவாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் மிக சரியாக நீங்கள் கணித்துள்ளதுபோல, இந்த படிப்புடன் ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.ஏ., கம்பெனி செகரடரிஷிப் போன்றவற்றில் ஒரு படிப்பை கூடுதல் தகுதியாக முடிப்பவருக்கு மட்டுமே உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன. இதை நாம் அனுபவப்பூர்வமாக கடந்த சில ஆண்டுகளாக உணர்ந்து வருகிறோம். எனவே உங்களது முடிவு மிகவும் புத்திசாலித்தனமானது.


இது பற்றிய முழு விபரங்களறிய தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

 

THE INSTITUTE OF COMPANY
SECRETARIES OF INDIA
NO.3 FIRST FLOOR
ESKAY BUILDINGS,
74 GREAMS ROAD, CHENNAI 600 006.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us