பைனான்சியல் மேனேஜ்மென்ட் அட்மிஷன் | Kalvimalar - News

பைனான்சியல் மேனேஜ்மென்ட் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இன்ஸ்டிடியூட் பார் பைனான்சியல் மேனேஜ்மென்ட் அன்ட் ரிசர்ச் (ஐ.எப்.எம்.ஆர்.,) கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

பி.ஜி.டி.எம்., (பைனான்சியல் இன்ஜினியரிங்):

முதலீடு, வங்கி, பங்கு வர்த்தகம், இடர்பாட்டு மேலாண்மை, நிதி பராமரிப்பு, ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் இப்படிப்பு மாணவர்களை தயார்படுத்துகிறது. குறிப்பிட்ட அளவு கணித அறிவு தேவைப்படும் இப்படிப்பில் சேர பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், புள்ளியியல், இயற்பியல் போன்றவற்றில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பி.ஜி.டி.எம்., (டெவலப்மென்ட் மற்றும் சஸ்டைனபில் பைனான்ஸ்):

நிதி, நிதி மேலாண்மை, ரூரல் பேங்கிங், மைரோ பைனான்ஸ் போன்ற துறைகளில் மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்குகிறது. இப்படிப்பில் சேர இளநிலை பட்டப்படிப்பில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கேட், ஜி.மேட் போன்ற தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சென்னையில் செல்லத்தக்க வகையில் "Institute for Financial Management & Research" என்ற பெயரில் ரூ.1,200க்கான டி.டி.,யைக் கொடுத்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். www.ifmr.ac.in என்ற வெப்சைட்டில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-05-2008

மேலும் விபரங்களுக்கு:

ஐ.எப்.எம்.ஆர்.,

24, கோத்தாரி ரோடு,

நுங்கம்பாக்கம்,

சென்னை 600 034

www.ifmr.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us