சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்று கூறலாமா? | Kalvimalar - News

சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்று கூறலாமா? பிப்ரவரி 15,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பிசினஸ் வெற்றிக்கு உதவும் திறன்கள் தான் சாப்ட் ஸ்கில்ஸ் என அழைக்கப்படுகின்றன.

* ஒரு குழுவில் பணியாற்றும் போது ஒருவருக்கொருவர் பழக உதவும் எளிதாக நட்பு கொள்ளும் திறன்

* குழுவில் ஒ ருவராக இயைந்து செயல்படும் குழு உணர்வு (டீம் ஸ்பிரிட்)

* யார் மனதையும் கவரும் பாந்தமான முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திறன்

*எளிமையான ஆனால் தீர்க்கமான பாடி லாங்வேஜ்

*யாரையும் கன்வின்ஸ் செய்து தனது கருத்துக்கேற்ப மாற்றிடும் உரையாடல் திறன்

*எதையும் பாசிடிவாகப் பார்க்கும் மனப்பாங்கு, தானே தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டு பிறரையும் எளிதில் ஊக்கப்படுத்திடும் ஆர்வம், நேரத்திற்குள் செய்து முடிக்கக் கூடிய மேலாண்மைத் திறன் இந்த குணங்களும் திறன்களும் அனைவரிடமும் இயல்பாகவே இருக்க வேண்டும் என்பதில்லை அல்லவா? ஆனால் இவற்றைப் பெற முயல துவங்கினாலே நாம் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

கணிதம், நளினம், நேர்மை, நம்பகத்தன்மை, இலகுத் தன்மை, சிறப்பான எழுத்துத் திறன், டிரைவிங் திறன், தானாகவே தன்னை நிர்வகித்துக் கொள்வது, எனர்ஜி நிறைந்தவராக செயல்படுவது, கற்றுக் கொள்ளும் ஆர்வம், காமன்சென்ஸ், சிறப்பான தோற்றம் ஆகியவற்றையும் சாப்ட் ஸ்கில்ஸ் என்றே அழைக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும்.... இவற்றில் 3ல் ஒரு பங்கு திறன்களையும் குணங்களையும் பெற்றிருந்தாலே நமக்கு நல்ல வேலை கிடைப்பது உறுதி என்பதை நடை றையில் நாம் பார்க்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us