இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி நிறுவனம் பற்றி அறியுங்கள் | Kalvimalar - News

இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி நிறுவனம் பற்றி அறியுங்கள்மே 31,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நாட்டின் சி.ஏ. தொழில்துறையை ஒழுங்கமைவு செய்வதற்காக, நாடாளுமன்ற சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்புதான், இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி நிறுவனம்(ICAI). மத்திய கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த கல்வி நிறுவனத்திற்கு, 5 பிராந்திய கவுன்சில்களும், நாடு முழுவதும் 126 கிளைகளும் உள்ளன. துபாயிலும் தனது அலுவலகத்தைக் கொண்டிருக்கும் இக்கல்வி நிறுவனம், 62 ஆண்டுகளுக்கு முன்பாக வெறும் 1500 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் இன்றோ, 1,65,000 உறுப்பினர்களையும், 6,50,000 மாணவர்களையும் கொண்டுள்ளது.

The Board of Studies(BoS) என்பது, இந்நிறுவனத்தின் பிரதான கல்விப் பிரிவாகும். மாணவர்கள் சிறந்த தொழில் நிபுணர்களாக உருவாகவும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவுமான அறிவு மற்றும் திறன்களுக்கான அடிப்படைகளை இந்த BoS வழங்குகிறது.

இதன் முக்கியப் பணிகள்

* அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய விரிவான பாட உபகரணங்களின் தொடர்ச்சியான திருப்புதல் மற்றும் முன்தயாரிப்பு.

* பரிந்துரைக்கப்பட்ட பதில்கள், திருப்புதல் தேர்வு பேப்பர்கள் மற்றும் காலக்கிரமமான இணைப்புகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான முன் தயாரிப்புகள்.

* அனைத்து நிலைகளிலான சி.ஏ. படிப்பிற்கும், வாய்வழி கற்பித்தல் வகுப்புகள் மற்றும் விர்ச்சுவல் வகுப்புகளை ஏற்பாடு செய்தல்.

* ஆளுமைத்திறன் மேம்பாடு, பொதுமேடை உரையாடல், தகவல்தொடர்பு திறன்கள், தேர்வுக்கு தயாராதல், நேர மேலாண்மை மற்றும் மன அழுத்தத்தை தவிர்த்தல் ஆகியவை தொடர்பான மேம்பாட்டு ஆலோசனைகளைக் கொண்ட கையேடுகளை வெளியிடுதல்.

* சி.ஏ. பாடத்திட்டத்திற்கு சம்பந்தமுடைய தலைப்புகளில், உரையாடல் சி.டி -க்கள் மற்றும் இ-லேர்னிங் அம்சங்களை தயாரித்தல்.

* தனிப்பட்ட கலந்துரையாடல், கடிதத் தொடர்பு மற்றும் மின்னஞ்சல் போன்றவை மூலமாக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்.

* மாணவர்களுக்கான, தேவை அடிப்படையிலான, மெரிட் அடிப்படையிலான, மெரிட் மூலமான தேவை அடிப்படையிலான மற்றும் அறக்கொடை உதவித்தொகை திட்டங்களை நிர்வகித்தல்.

* பரஸ்பர நன்மைத் திட்டங்களுக்காக, பல இந்திய பல்கலைகள், வெளிநாட்டு அக்கவுண்டிங் அமைப்புகள் ஆகியவற்றோடு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல்.

* The Chartered Accountant Student எனும் பெயரிலான மாதாந்திர பத்திரிகையை வெளியிட்டு விநியோகித்தல்.

* சி.ஏ. மாணவர்களின் அகில இந்திய மாநாடுகள், 1 அல்லது 2 நாள் செமினார்கள், பேச்சுப் போட்டிகள், வினாடி-வினா போட்டிகள், பல்கலைகளுடனான கூட்டு கூட்டு செமினார்கள் மற்றும் விவாத அரங்குகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தல்.

3 அடுக்கு நிலைகளிலான பாடத்திட்டம்

* ஆரம்ப நிலை தேர்வு - பொது நிபுணத்துவ தேர்வு(Common proficiency test)
* முதல் நிலை - ஒருங்கிணைந்த தொழில்முறை திறன் படிப்பு
* இறுதி நிலை - இறுதி படிப்பு

CA படிப்பின்போது, 100௦௦ மணிநேர தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிற்சியின் மூலம்தொழில்நுட்ப திறனையும், 35 மணிநேர ஓரியண்டேஷன் படிப்பு மூலமாகவும், 15 நாட்கள் பொது மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திறன் படிப்பு மூலமாகவும் Interpersonal திறன்களை பெறுகிறார்கள்.

Chartered Accountant ஆவதற்கு தேவைப்படும் அம்சங்கள்

* 10௦ ம் வகுப்பு தேர்வை முடித்த பின்னர், CPT தேர்வுக்காக, இக்கல்வி நிறுவனத்தில் சேருதல்.
* 12 ம் வகுப்பு தேர்வை முடித்த பின்னர், CPT தேர்வை எழுதுதல்.
* IPCC(Integrated professional competence course) தேர்வுக்காக, பதிவு செய்யும் முன்பாகவே, CPT மற்றும் பள்ளி மேல்நிலை தேர்வுகளில் தேறியிருத்தல்.
* குரூப் 1 அல்லது குரூப் 2ல், அல்லது IPCC -ன் 2 குரூப்களிலும் சேருதல்
* IPCC பதிவு தேதியிலிருந்து, 9 மாதங்கள் ஆய்வுப் படிப்பை வெற்றிகரமாக முடித்தல்.

போன்றவைகளோடு, இன்னும் பல முக்கிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. இவைப் பற்றி விரிவாக அறிய http://www.icai.org/ என்ற வலைத்தளம் செல்க.

குறிப்பு

CPT தேர்வை எழுதுவதிலிருந்து, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் குறிப்பிட்டளவு மதிப்பெண் பெற்றவர்களும், ICWAI மற்றும் ICSI பாடங்களில், இன்டர்மீடியேட் நிலையில் தேறிய மாணவர்களுக்கும், விலக்களிக்கப்படுகிறது.

CPT மற்றும் IPCC தேர்வுகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://www.icai.org/ என்ற வலைத்தளம் செல்க.

கட்டண விபரங்கள்

* CPT தேர்வுக்கான கட்டணம்  -  ரூ.6000
* IPCC தேர்வுக்கான கட்டணம்  -  ரூ.9000
* Articled பயிற்சி கட்டணம்  -  ரூ.2000
* இறுதி கோர்ஸ் பதிவுக் கட்டணம்  -  ரூ.10,000
* 100 மணிநேரங்கள் தகவல் தொழில்நுட்ப பயிற்சி கட்டணம்  -  ரூ.4000
* 35 மணிநேரங்கள் ஓரியண்டேஷன் நிகழ்ச்சிக் கட்டணம்  -  ரூ.3000
* பொது மேலாண்மை மற்றும் தகவல்தொடர்பு திறன்கள் கோர்ஸ் கட்டணம்  -  ரூ.4000

கல்வி உதவித்தொகை

மெரிட், மெரிட் மற்றும் தேவை அடிப்படையிலான மற்றும் தேவை அடிப்படையிலான மற்றும் நலிந்த பிரிவினர் போன்ற பல வகைகளில், மாணவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

கட்டண சலுகை

மாற்றுத் திறனாளி மாணவர்கள், ராணுவ மற்றும் துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் குடும்பங்களில் பிறந்து, பாதுகாப்பு பணியில், தங்களின் தந்தை அல்லது தாயை இழந்த மாணவர்கள் மற்றும் மெரிட் மாணவர்கள் ஆகியோருக்கு, கல்வி கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

Accounting Technician Course(ATC)

ஒருவர் தான் விரும்பினால் இத்தேர்வை எழுதலாம். IPCC -ல் குரூப் 1 என்பது, ATC -க்கு நிகரானது.

Accounting Technician ஆவதற்கான முறைகள், ஆனபிறகு, CA ஆவதற்கான வாய்ப்புகள் போன்ற பல விபரங்களை அறிந்துகொள்ள http://www.icai.org/ என்ற இணையதளம் செல்க.

ATC பாட விபரங்கள் மற்றும் மதிப்பெண்கள்

* பேப்பர் 1  -  அக்கவுண்டிங்(100 மதிப்பெண்கள்)
* பேப்பர் 2  -  வணிகச் சட்டம், நெறிமுறைகள் மற்றும் தகவல்தொடர்பு(100 மதிப்பெண்கள்)
* பேப்பர் 3  -  காஸ்ட் அக்கவுண்டிங் மற்றும் பைனான்சியல் மேலாண்மை(100 மதிப்பெண்கள்)
* பேப்பர் 4  -  வரிவிதித்தல்(100 மதிப்பெண்கள்)

இக்கல்வி நிறுவனம் பற்றிய அனைத்து விபரங்களையும், முழுமையாக, தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ள http://www.icai.org/ என்ற இணையதளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us