சென்னை கணிதவியல் கல்வி நிறுவனம் | Kalvimalar - News

சென்னை கணிதவியல் கல்வி நிறுவனம்டிசம்பர் 21,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

கணித அறிவியலில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கான ஒரு அறிவுசார் மையமாக சென்னை கணிதவியல் கல்வி நிறுவனம்(Chennai Mathematical Institute) திகழ்கிறது. SPIC அறிவியல் பவுண்டேஷனின் ஒரு பகுதியாக கடந்த 1989ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனம், 1996ம் ஆண்டு முதல், தன்னாட்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

CMI -ல் உள்ள கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையின் ஆராய்ச்சி குழுக்கள், இந்திய அளவில் புகழ்பெற்றவை. பல சிறந்த பிஎச்.டி மாணவர்களை இந்த நிறுவனம் பயிற்றுவித்துள்ளது.

இந்தியாவில், கற்பித்தலுக்கும், ஆராய்ச்சிக்கும் இடையேயான இடைவெளியைப் போக்கும் பொருட்டு, கடந்த 1998ம் ஆண்டு, இந்நிறுவனத்தில், கணிதம் மற்றும் தொடர்புடைய பாடங்களில் பி.எஸ்சி மற்றும் எம்.எஸ்சி பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிறுவனத்தில் பட்டப்படிப்புகளை நிறைவுசெய்யும் மாணவர்கள் பெறும் அங்கீகாரமே தனி.

இந்நிறுவனத்திற்கான நிதி தேவைகள், அரசு மற்றும் கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்றன.

நோக்கம் மற்றும் கற்பித்தல்

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் வரிசையில் இணைவதே இந்த நிறுவனத்தின் லட்சியமாக உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலிலுள்ள போஜ் திறந்தநிலை பல்கலையுடன்(MPBOU) சேர்ந்து, ஒரு புதிய ஏற்பாட்டை செய்தபின்னரே, இந்நிறுவனத்தில் கடந்த 1998ம் ஆண்டில், பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டன. முதன்முதலாக, கணிதம் மற்றும் கணிப்பொறி அறிவியல் பிரிவுகளில் பி.எஸ்சி(ஹானர்ஸ்) படிப்பு தொடங்கப்பட்டது.

பின்னர், 2001ம் ஆண்டு, கணிதம் மற்றும் கணிப்பொறி அறிவியல் பிரிவுகளில் தனி எம்.எஸ்சி படிப்புகள் துவக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, 2003ம் ஆண்டில், இயற்பியல் பாடத்தில் பி.எஸ்சி பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது.

கடந்த 2007ம் ஆண்டுமுதல், ஒரு பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தில், தான் வழங்கும் படிப்புகளுக்கான பட்டங்களை தானே வழங்கி வருகிறது. இந்தப் பட்டங்கள், அகடமிக் கவுன்சிலால் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

சிறப்புகள்

இந்நிறுவனத்தில்(CMI) பட்டம் பெற்றவர்கள், உலகெங்கிலுமுள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பில் சேர்கிறார்கள்.

இந்திய கணிதஅறிவியல் கல்வி நிறுவனத்தில்(IMSc) பணிபுரியும் ஆசிரியர்கள், CMI -ல் கற்பிக்கும் பணியை செய்கிறார்கள். இதைத்தவிர, நாட்டின் பல இடங்களிலிருந்தும், பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இந்நிறுவனத்திற்கு வருகிறார்கள்.

பல தொடர்ச்சியான Exchange திட்டங்களையும் CMI வைத்துள்ளது.

நூலகம்

இந்நிறுவனத்தில் பல சிறந்த புத்தகங்களைக் கொண்ட, நவீன நூலகம் அமைந்துள்ளது.

இந்நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள்

B.Sc. (Hons.) Mathematics and Computer Science: 12th standard or equivalent.
B.Sc. (Hons.) Mathematics and Physics: 12th standard or equivalent.
M.Sc. in Mathematics: B.Sc.(Math)/B.Math/B.Stat/B.E./B.Tech.
M.Sc. in Applications of Mathematics: B.Sc.(Math,Physics,Statistics)/B.Math/B.Stat/B.E./B.Tech.
M.Sc. in Computer Science: B.E./B.Tech/B.Sc.(C.S.)/B.C.A. or B.Sc.(Math) with a strong background in C.S.
Ph.D. in Mathematics: B.E./B.Tech/B.Sc.(Math)/M.Sc.(Math).
Ph.D. in Computer Science: B.E/B.Tech/M.Sc.(C.S.)/M.C.A.
Ph.D. in Physics: B.E./B.Tech/B.Sc.(Physics)/M.Sc.(Physics).

படிப்புக்கு விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை ஆன்லைனிலோ அல்லது நேராக சென்றோ பெறலாம். எந்தவொரு படிப்பிலும் சேரும் முன்பாக, நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். முதுநிலைப் படிப்புகள் மற்றும் பிஎச்.டி படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.

உதவித்தொகைகள்

இங்கே படிக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

பி.எஸ்சி(ஹானர்ஸ்) படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.4000, எம்.எஸ்சி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 மற்றும் பிஎச்.டி ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் ரூ.16000 என்ற அளவில் உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

சேர்க்கை மற்றும் விண்ணப்பித்தல் குறித்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள admissions@cmi.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

CMI பற்றி பலவித விவரங்களை மேலும் முழுமையாக அறிந்துகொள்ள http://www.cmi.ac.in// என்ற இணையதளம் செல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us