பிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம் | Kalvimalar - News

பிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்மார்ச் 20,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

பிளான்டேஷன் துறையை, மேலாண்மைக் கல்வி மற்றும் பயிற்சியின் மூலமாக, நவீனப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான், பிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம். ஒரு தீவிரமான கல்வி நிறுவன - தொழிற்கூட ஒத்துழைப்பு மாதிரி அடிப்படையிலான, ஆசிய அளவில், ஒரு பிரத்யேக மேலாண்மை கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது.

கடந்த 1993ம் ஆண்டு ஒரு சுயாட்சி கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது.

நிறுவியதன் நோக்கம்

இக்கல்வி நிறுவனம், கீழ்கண்ட 5 நோக்கங்களுக்காக நிறுவப்பட்டது.

* திட்டமிட்டு செயல்படக்கூடிய பொதுநல மன்றம்

* சிறந்த தலைவர்களை உருவாக்கல்

* சிறந்த மேலாளர்களின் தொடர்ச்சியான மேம்பாடு

* செயல்பாட்டு அடிப்படையிலான ஆராய்ச்சி

* அறிவார்ந்த சுயசார்பு மற்றும் அறிவுசார் முதலீட்டை அதிகரித்தல்.

இதன் செயல்பாடுகள்

எதிர்கால அறிவுத் தேவைகளை நிறைவுசெய்ய, வேளாண்-வணிகம் மற்றும் பிளான்டேஷன் மேலாண்மை என்ற பெயரில், முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

பிளான்டேஷன் மற்றும் வேளாண் வணிகம் தொடர்பான வொர்க்ஷாப்கள் மற்றும் செமினார்களை நடத்துகிறது.

தொழில்ரீதியிலான முதலாளிகள், மேலாளர்கள் மற்றும் வாரிய அலுவலர்கள் ஆகியோர் பயனடையும் பொருட்டு, குறுகியகால எக்ஸிகியூடிவ் படிப்புகளை வழங்குகிறது.

செயல் அடிப்படையிலான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நிபுணர்களை பரிமாறிக்கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, போஸ்ட் டாக்டோரல் ஆராய்ச்சிகளுக்கும் உதவி புரிகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள்

140க்கும் மேற்பட்ட ஜர்னல்கள், 8,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளிட்ட இன்னபிற சிறப்பான வசதிகளைக் கொண்ட நூலகமும், 30க்கும் மேற்பட்ட அதிவேக ப்ராசஸர்கள் உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்ட கணினி ஆய்வகமும், பல்வேறான சிறப்பு உபகரணங்களைக் கொண்ட ஆய்வகமும் இக்கல்வி நிறுவனத்தில் உள்ளன.

ஆராய்ச்சி நடவடிக்கைகள்

கொள்கை, மேலாண்மை மற்றும் இயங்குதல் விஷயங்களில், ஆழமான ஆராய்ச்சி திட்டத்தை இக்கல்வி நிறுவனம் கொண்டுள்ளது. தொழில்துறை, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆராய்ச்சித் திட்டங்களை இக்கல்வி நிறுவனம் மேற்கொள்கிறது. இக்கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி பேப்பர்கள், கீழ்காணும் பிரிவுகளில் விரிந்துள்ளன. அவை,

Policy and managerial issues related to specific commodity.
Functional area specific (Marketing, Finance, HRD, Strategic Management,
Operations Management, Economics, Extension Management, etc)
Management Thought, Management Theory and Social Discourse.

மேலும், இந்நிறுவனத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகளின் பரந்த நிலைகள் மற்றும் கருத்தாக்கங்களை பின்வரும் தலைப்புகளின் மூலம் அறியலாம். அவை,

Global Competitiveness of the Plantation Industry
Productivity & Quality
Market Structure, Market Intelligence and Market Information
Brand Building and New Product Innovation
E-Commerce, National Commodity Information Grid
Improving Competitiveness of Micro Enterprises
Sustainable Plantation Management
Estate Performance Agreement Systems
Commodity Futures
Extension Management and Grassroots Institution building
Agri-business Development
Social Development Contribution of Indian Plantation Industry
HRD and Work Culture Development
Social Concerns of Plantation Industry: Absenteeism, Alcoholism, etc.
Knowledge Management in Plantation Industry
Risk Management
Cost Competitiveness

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகளின் விபரங்கள்

PGP - ABPM எனப்படும், முதுநிலை டிப்ளமோ படிப்பானது, பிளான்டேஷன் மற்றும் வேளாண் வணிகத் துறையில் நுழைபவர்களுக்கான ஒரு மேலாண்மைப் படிப்பாக வழங்கப்படுகிறது. மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நவீன ஐடியாக்கள் மற்றும் நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவதே இப்படிப்பின் நோக்கம். இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களது தொழில்துறையில் சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

காலஅளவு - இப்படிப்பின் காலஅளவு 24 மாதங்கள். இது ரெசிடென்ஷியல் படிப்பாகும். இப்படிப்பு AICTE அங்கீகாரம் பெற்றது மற்றும் எம்பிஏ படிப்பிற்கு நிகரானது.

மாணவர் சேர்க்கை நடைமுறைகள்

இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, பொது சேர்க்கை முறை மற்றும் Sponsored சேர்க்கை முறை ஆகிய 2 முறைகளில் நடத்தப்படுகிறது. இளநிலைப் பட்டப் படிப்பில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்(SC/ST 45%) பெற வேண்டும். NRI/PIO மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

CAT/MAT/ATMA/CMAT ஆகிய தேர்வுகளில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்களே விண்ணப்பிக்கலாம். உங்களின் கல்வி செயல்பாடுகள், தேர்வு மதிப்பெண்கள், எழுத்துத் திறன், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இடஒதுக்கீட்டு முறை உண்டு. மேலும், உதவித்தொகை திட்டங்களும் உண்டு.

கல்விக் கட்டணம்

2 ஆண்டுகளுக்கான கல்வி நிறுவனக் கட்டணம் மட்டும் ரூ.3.5 லட்சங்கள். இதை 2 தவணைகளாக கட்டலாம். வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் NRI/PIO Sponsored மாணவர்களுக்கான கட்டணம் 10,500 அமெரிக்க டாலர்கள். இக்கட்டணங்களில், உணவு, இருப்பிடம், மின்சாரம், கணினி, புத்தகங்கள், கள ஆய்வு மற்றும் இதர செலவினங்கள் அடங்காது.

விரிவான விபரங்களுக்கு: http://www.iipmb.edu.in/index.php?option=com_content&view=article&id=62&Itemid=173

டீ டேஸ்டிங் மற்றும் மார்க்கெடிங் படிப்பு

டீ டேஸ்டிங் மற்றும் மார்க்கெடிங் என்ற பெயரில், புரொபஷனல் சான்றிதழ் படிப்பை இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது. இப்படிப்பானது, டீ தொடர்பான தொழில்துறையில் இருக்கும் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொழில்துறை சம்பந்தமான, நவீன வணிக மேலாண்மை கொள்கைகள், சந்தை தகவல், நுட்பங்கள் மற்றும் டீ டேஸ்டிங் திறன் பயிற்சிகள் போன்றவை, மேலாண்மை திறனுடன், உலக தரத்திலான டீ டேஸ்டிங் நிபுணர்களை உருவாக்கும் விதமாக, இப்படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

பணி வாய்ப்புகள்

இப்படிப்பை முடிக்கும் ஒருவர், தேசிய மற்றும் சர்வதேச அளவில், புகழ்பெற்ற டீ கம்பெனிகள், தரகு தொழில்துறை, பானங்கள் தொழில்துறை மற்றும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறான இடங்களில் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

இப்படிப்பானது, இந்திய தேநீர் வாரியம், தேநீர் தொழில்துறை ஆகியவற்றால், தேநீரை சுவை பார்ப்பதற்கு ஒரு நல்ல நிபுணத்துவத்தை தரக்கூடிய படிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பில் சேரும் தகுதிகள்

UGC/AIU ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில், நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

NRI/PIO மற்றும் பிறநாட்டு குடிமக்களும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

காலஅளவு - 45 நாட்கள் Intensive படிப்பாக வழங்கப்படுகிறது. மே மாதம் இப்படிப்பு துவங்கும்.

சான்றிதழ்

இப்படிப்பை, வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், Certificate Programme on Tea Tasting and Marketing என்ற பெயரில் சான்றிதழைப் பெறுவார்கள்.

கட்டணம்

கல்விக் கட்டணமாக ரூ.60,000 வசூலிக்கப்படுகிறது. உணவு, தங்குமிடம், புத்தகங்கள் உள்ளிட்ட இதர செலவுகள் எதுவும் இதில் அடங்காது.

மாணவர் சேர்க்கை

டீ டேஸ்டிங் தொடர்பான, சைக்கோமெட்ரிக் சோதனை மற்றும் BLIND(Sensory) சோதனை ஆகியவற்றின் அடிப்படையிலேயே, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விரிவான விபரங்களுக்கு: http://www.iipmb.edu.in/images/application/PCP-TTMBrochureMay2013.pdf

டீ எஸ்டேட் மேனேஜ்மென்ட் படிப்பு

டீ எஸ்டேட் மேலாண்மையில், புரொபஷனல் சான்றிதழ் படிப்பை, இந்நிறுவனம் வழங்குகிறது. ஏனெனில், ஒரு டீ எஸ்டேட்டின் பணியாளர்கள், நிதி, தொழில்நுட்பம், அன்றாட நடவடிக்கைகள் போன்ற பணிகளை கவனிக்க, நிபுணர்களின் தேவை அவசியம். இத்தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு, இப்படிப்பு வழங்கப்படுகிறது.

இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், மென்திறன் மேம்பாடு, தகவல்தொடர்பு திறன்கள், சமூக திறன்கள், அறிக்கை எழுதும்திறன்கள், வழங்குதல் திறன்கள் போன்ற பலவித திறன்கள் தொடர்பாக பயிற்சியளிக்கப்படுகிறார்கள். இப்படிப்பை முடித்த ஒருவர், ஒரு டீ எஸ்டேட் நிர்வாகத்தை சிறப்பான வகையில் மேலாண்மை செய்யும் திறனைப் பெறுகிறார்.

பணி வாய்ப்புகள் - இப்படிப்பை முடித்தவர்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில், தேயிலைத் தோட்டங்களில் நல்ல பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

தேயிலை எஸ்டேட்டுகளில் பணிபுரிய விரும்பும் அனுபவமற்றவர்கள் மற்றும் எஸ்டேட்டில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்காக இப்படிப்பு வழங்கப்படுகிறது.

காலஅளவு - 30 நாட்கள் இன்டென்சிவ் ப்ரோகிராம்.

தகுதிகள்

இப்படிப்பில் சேர, UGC/AIU அங்கீகாரம் பெற்ற ஏதேனுமொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கார்பரேட்டுகள், பிளான்டர்ஸ் மற்றும் பிளான்டேஷன் அசோசியேஷன் ஆகியவற்றால் Sponsored செய்யப்படும் மாணவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

சான்றிதழ்

இப்படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் மாணவர்களுக்கு Professional Certificate Programme - Tea Estate Management என்ற பெயரில் சான்திறிதழ்கள் வழங்கப்படும்.

கட்டணம்

கல்விக் கட்டணமாக ரூ.25000 வசூலிக்கப்படுகிறது. தங்குமிடம், உணவு மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட இதர செலவுகள் இதில் அடங்காது.

இப்படிப்பிற்கு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விரிவான விபரங்களுக்கு: http://iipmb.edu.in/images/pdf/PCP-TEM%20Brochure.pdf.

டீ டேஸ்டிங் தொடர்பான படிப்புகளை வழங்கும் இதர இந்திய கல்வி நிறுவனங்கள்

* Birla Institute of Futuristic Studies - South Kolkata, West Bengal

* NITM, Darjeeling Tea Research and Management Association,
Kadamtala, West Bengal

* Dipras Institute of Professional Studies, Salt Lake City, Kolkata

* Assam Darjeeling Tea Research Center, Kurseong, Darjeeling

* UPASI Tea Research Institute, Valparai, Tamil Nadu

* The Tea Tasters Academy, Coonoor, Nilgiris, Tamil Nadu

* Assam Agricultural University, Jorhat, Assam

* Indian Institute of Plantation Management, Malathalli, Bangalore

* Assam University, Silchar, Assam

* Assam Agriculture University (AAU)

* Ch. Sarwan Kumar Krishi Vishwa Vidyalaya

* Bidhan Chandra Krishi Vishva Vidyalaya (BCKVV)

* Uttar Banga Krishi Vishwa vidyalaya (UBKV)

* Tamil Nadu Agricultural University (TNAU)

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us