பொருத்தமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுப்பதற்கான 10௦ சிறந்த வழிமுறைகள் | Kalvimalar - News

பொருத்தமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுப்பதற்கான 10௦ சிறந்த வழிமுறைகள்ஏப்ரல் 26,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரு பல்கலைக்கழகத்தை பலர் விரும்புகிறார்கள் என்ற ஒரு காரணத்திற்காக, அப்பல்கலைக்கழகம் நீங்கள் விரும்பும் படிப்புக்கேற்ற ஒரு இடமாக இருந்துவிடாது. இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுப்பதன் மூலமாக நீங்கள் சரியான தீர்வை அடைந்துவிட முடியாது. அதேசமயத்தில் தவறான ஆலோசனைகளுக்கு பலியாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். எனவேதான் விரிவான 10 வழிகாட்டுதல்களை இங்கே வழங்கியிருக்கிறோம். இவற்றை கவனமாக படித்து உங்களுக்கு ஏற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை 1 : ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 300௦௦ டாலர்கள் வரை செலவு பிடிக்கும் என்பதால், விண்ணப்பிக்கும் முன்பாக நீங்கள் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். உங்களால் என்ன படிக்கப் போகிறோம் என்ற தெளிவுக்கு வர முடியவில்லை எனில், தெளியும் வரை முடிவை ஒத்தி போடவும்.

வழிமுறை 2 : நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் பாடத்தை பற்றி நல்ல அறிமுகத்தை வைத்திருக்க வேண்டும். அதன்பொருட்டு வலைத்தளங்கள், துண்டுபிரசுரங்கள், கையேடுகள் போன்றவற்றில் அதைப் பற்றிய விரிவான தேடலில் ஈடுபட வேண்டும்.

வழிமுறை 3 : பினான்ஷியல் டைம்ஸ், நியூஸ்வீக் போன்ற நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து நீங்கள் பல்கலைக்கழகங்களின் தர வரிசைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

வழிமுறை 4 : அந்த தர நிலைகளிலிருந்து பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து, அவற்றில் எது உங்கள் விருப்பப்பாடத்தில் நல்ல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது மற்றும் அதற்கு மானியங்கள் வழங்குகிறது என்பதை அறிய வேண்டும். இதன்பொருட்டு அந்த பல்கலைக்கழகங்களைப் பற்றிய உண்மையான தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துணைத் தூதரகங்களை அணுக வேண்டும்.

வழிமுறை 5 : உங்கள் பாடத்தைப் பற்றி எந்த சந்தேகம் இருந்தாலும் அதற்கான விளக்கத்தைப் பெற சேர்க்கை அதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மேலும் பழைய மாணவர் மற்றும் ஆசிரியரிடம் தொடர்பை ஏற்படுத்தி, விளக்கம் பெறலாம்.

வழிமுறை 6 : உங்கள் மூத்த மாணவர்கள் சென்று சேர்ந்த மற்றும் நிதி உதவிகள் பெற்ற பல்கலைக்கழகங்கள் பற்றி பரிசீலனை செய்யவும். அந்த மூத்த மாணவர்களின் படிப்பு மற்றும் செயல்பாட்டில் அந்த பல்கலைக்கழகங்களுக்கு திருப்தி இருந்தால், உங்களின் விண்ணப்பத்தையும் அவை சாதகமான முறையில் பரிசீலனை செய்யும்.

வழிமுறை  7  :  பொதுவாக பல தொழிற்சாலைகள் தங்களுக்கான ஊழியர்களை தேர்ந்தெடுக்க, சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களையோ அல்லது அந்த தொழிற்சாலைகளின் அருகாமையிலுள்ள பல்கலைக்கழகங்களையோ தான் நாடும். எனவே நீங்கள் பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் அருகாமையில் சில பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளனவா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். (எ.கா- அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம்)

வழிமுறை  8  : பல்கலைக்கழகங்களில் நீங்கள் கனவு காணக்கூடியதாக ஒன்றிரண்டையும், நல்ல பொருத்தமானதாக மூன்று-நான்கையும், பாதுகாப்பானதாக இரண்டையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். கனவுகாணக்கூடியவை, தரவரிசையில் முதல் 10௦ இடங்களுக்குள் இருக்க வேண்டும், அதேசமயம் அவற்றில் சேர்வது கடினம்.

பொருத்தமானவை, கல்வி தரமுள்ளவையாகவும் சேர்வது எளிதானவையாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பானவை, தரவரிசையில் முதல் 5௦ இடங்களுக்குள்ளும் அதேசமயம் நல்ல வசதிகளுடனும் இருக்க வேண்டும். இந்த மூன்று வகைகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் ஏதாவதொன்றில் சேர்ந்தாக வேண்டியது கட்டாயம்.

வழிமுறை  9  :  தொடர்ந்து குழப்பமாக இருந்தால், ஒரு ஒப்பீட்டு விளக்கப்படத்தை வடிவமைத்து, கீழ்கண்ட விதிமுறையின்படி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் சாதக-பாதகங்களை மதிப்பிடவும்:

*  முந்தைய ஆண்டுகளின் மாணவர் சேர்க்கையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சர்வதேச ஆங்கில மொழி தேர்வுகளின் குறைந்தபட்ச மதிப்பெண்கள்.

*  உங்களின் விருப்பப் பாடங்கள் கிடைப்பது

*  பாடத்தின் தரநிலை

*  சம்பந்தப்பட்ட துறையின் ஆசிரியர்கள் மற்றும் அதன் சிறப்புத்தன்மை

*  இந்திய மாணவர்களின் எண்ணிக்கை

*  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளின் அங்கீகாரம்

*  கல்விக்கான செலவு

*  தங்குமிடம், வசதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்

 

வழிமுறை 10 இந்த 9 வழிமுறைகளின் மூலம் நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து உங்கள் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்திருப்பீர்கள்; எனவே அடுத்து அதில் சேர்வதற்கு பின்வரும் வழிமுறைகளின் மூலம் உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள்,

*  நல்ல ஜிபிஎ/சிஜிபிஎ 

*  நல்ல ஜிஎம்எடி/ஜிஆர்இ/சாட்/ஐஇஎல்டிஎஸ்/டோபெல் மதிப்பெண்கள்

*  ஒரு வலுவான தனிப்பட்ட அறிக்கை அல்லது நோக்க அறிக்கை

*   நல்ல வேலை அனுபவம்

*   பல்திறன் செயல்பாட்டு அனுபவம்

*   சுருக்கமான, கவர்ச்சியான சுயவிவரம்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us