எனது பெயர் ராமசாமி. டோபல் தேர்வின் பார்மேட் குறித்தும், அதற்கு தயாராகும் முறைகள் பற்றியும் கூறுக. | Kalvimalar - News

எனது பெயர் ராமசாமி. டோபல் தேர்வின் பார்மேட் குறித்தும், அதற்கு தயாராகும் முறைகள் பற்றியும் கூறுக.டிசம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

படித்தல், பேசுதல், கவனித்தல் மற்றும் எழுதுதல் என்ற 4 பகுதிகளைக் கொண்டது டோபல் தேர்வு. வகுப்பறையில், ஒரு மாணவரின் வெற்றிக்குத் தேவையான ஆங்கில மொழித்திறனை அளவிடும் வகையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மேற்கூறிய 4 பகுதிகளையும் ஒருங்கிணைத்து, அவற்றை நீங்கள் எவ்வாறு தகவல் தொடர்பில் வெற்றிகரமாக பயன்படுத்துகிறீர்கள் என்பது மதிப்பிடப்படுகிறது.

இத்தேர்வுக்கு தயாராவதை எளிமைப்படுத்த, TOEFL Test Prep Planner, 8 வார காலண்டரை வழங்குகிறது. இதன்மூலம், தேர்வு நாளுக்கு, நீங்கள் திட்டமிட்டு தயாராக முடியும். www.ets.org/toefl/planner என்ற வலைத்தளத்திற்கு சென்று பயன்பெறவும். இது மட்டுமின்றி, www.ets.org/toefl/quickprep என்ற இணையதளத்திற்கும் செல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us