சிறப்பான எதிர்காலத்திற்கு உகந்த படிப்பு எது? | Kalvimalar - News

சிறப்பான எதிர்காலத்திற்கு உகந்த படிப்பு எது?செப்டம்பர் 06,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்று உங்களது தகுதிகளை விட திறன்களே முக்கியம். முதலில் இதை மனதில் கொள்ளுங்கள். எனினும் தற்போதைய சூழலில் ‘டாப் ஜாப்’ என அழைக்கப்படும் துறைகளைப் பற்றி இங்கே தகவல் தருகிறோம்.

 

கடந்த 17 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பல சாதனைகளை செய்துள்ளது.

 

உலகமயமாக்கல் பற்றி சில அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சந்தேகங்களையும் பயங்களையும் கிளப்பியிருந்தும், உண்மையிலேயே இதன் எதிர்விளைவுகள் சிலவற்றை நாமும் அங்கங்கே பார்த்திருந்தாலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் பொருளாதாரத்தில் உயரும் வளர்ச்சிக் குறியீடுகளை ஏற்படுத்தியிருப்பதாலும் உலகமயமாக்கல் என்பது இன்றைய இந்திய இளைஞனுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான்.

 

இந்த பொருளாதார வளர்ச்சியில் அரசுத் துறைக்கான ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன.

இச் சூழலில் நமது திறன் மட்டுமே நம்மை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வாகனமாக இருக்கிறது. புதிது புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

எல்லோருக்குமான வேலை வாய்ப்புகள் இப்போது உருவாக்கப்படுகின்றன. அடிப்படையில் இந்தியரின் திறன்களான ஆங்கிலம், கம்ப்யூட்டர் திறன் ஆகியவை இதற்கு பெருமளவில் உதவியுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் அதிக வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ள துறைகளாக பின்வருவன அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஏர்லைன்ஸ்

இந்தியாவில் மிக வேகமாக வளரும் துறைகளுள் ஒன்றாக ஏர்லைன்ஸ் துறை உள்ளது.

தனியார் வேகமாக வளரும் இந்தத் துறையில் 2010க்குள் பைலட்டுகள் மட்டுமே 2000 பேர் தேவையாம். இது போக ஏர்லைன்ஸ் தொடர்பான பிற பணிகளுக்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கப் போகிறது. இவை மட்டும் 10 ஆயிரம் காலியிடங்கள் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தத் துறையில் பைலட் பணிகள் பற்றித் தான் அறிவோம். ஆனால் இதில் உள்ள பிற பணி வாய்ப்புகள் எவை தெரியுமா?
ஏர் டிராபிக் கன்ட்ரோலர்
பயணிகள் மற்றும் கார்கோ விமானங்கள் பராமப்பு
ரிசர்வேஷன்
பொது நிர்வாகம்
நிதி வர்த்தகம்
மக்கள் தொடர்பு
ரீடெயில்

வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு சமீபத்தில் திறந்து விடப்பட்டுள்ள இத்துறையில் முதலீடுகள் ஆயிரக்கணக்கான கோடிகளாம். பெரிய ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் காலியாகவிருக்கும் வேலை வாய்ப்புகள் லட்சக்கணக்கில் உள்ளன.

இன்ஜினியங் மனுபாக்சரிங்

ஐடி துறைக்கு அதிக அளவில் இன்ஜினியர்கள் சென்று விடுவதால் உற்பத்திக்கான துறைகளில் இவர்களுக்கான தேவை கடுமையாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு ஐடி துறையில் மட்டும் 50 ஆயிரம் இன்ஜினியர்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். இன்ஜினியரிங் திறனுடன் அடிப்படை ஆங்கிலத் திறன் பெற்றவருக்கு பிற துறைகளில் சிவப்பு கம்பள வரவேற்பு அடுத்த சில ஆண்டுகளில் காத்திருக்கிறது.

பாங்கிங் இன்சூரன்ஸ்

வேக வேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறை தான் 2006, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் அதிக நபர்களுக்கு வேலை தரும் துறைகளுள் ஒன்றாக விளங்கியுள்ளது. எம்.பி.ஏ. போன்ற நிதி சார்ந்த படிப்புகள் முடித்தவருக்கு இவை கிடைக்கின்றன.

டெலிகாம்

ஆண்டுக்கு 70 சதவீத அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்தத் துறையில் தேவைப்படும் நபர்களை விட 10 சதவீதம் குறைவாகவே திறன் உள்ளவர்கள் கிடைப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் சிறப்பான ஆங்கிலத் திறனும், தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர மேலும் ஒரு மொழி அறிந்திருப்பதும், ஆப்டிடியூட் திறன்கள் பெற்றிருப்பதும் அடுத்த சில ஆண்டுகளில் உங்களை பெரும் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

உணவுத்துறை

புட் பெவரேஜஸ் மேனேஜர், எக்சிகியூடிவ் ஹவுஸ்கீப்பர், ரெஸ்டாரன்ட் மேனேஜர், பிரண்ட் ஆபிஸ், புக் கீப்பிங், ஹவுஸ் கீப்பிங், டயட்டிக்ஸ் போன்ற பல்வேறு பணி வாய்ப்புகளைக் கொண்டிருப்பது உணவுத் துறை.
உலகமயமாக்கலால் இந்தியாவின் பொருளாதாரம் வளர வளர இந்தத் துறையும் வளர்ந்து கொண்டே செல்கிறது. எனவே புரபஷனலாக இதில் படிப்பு படித்திருப்பவருக்கு அடுத்த சில ஆண்டுகளில் பெரும் வரவேற்பு காத்திருக்கிறது.

சுற்றுலாத்துறை

டிராவல் ஏஜண்ட், டூர் ஆபரேட்டர், டிராவல் கன்சல்டன்சி, வாகன நிர்வாகம் போன்ற பல்வேறு வாய்ப்புகளை இது கொண்டுள்ளது.

 

பிற துறைகள்:

அனிமேஷன்
புவியியல்
நானோ டெக்னாலஜி
மைக்ரோபயாலஜி பயோ-டெக்னாலஜி
மொழிகள்

Advertisement
« முதல் பக்கம்
எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us