வணக்கம். எனது பெயர் ராம் வீரப்பன். நான் தற்போது பி.காம் முடித்துள்ளேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெடிங் துறையில் 1 ஆண்டு அனுபவம் உள்ளது. எனவே, மார்க்கெடிங் பிரிவில், வெளிநாட்டில், ஒரு எம்பிஏ படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல பல்கலைகள் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கேட்கின்றனவா? அப்படியெனில், நல்ல கல்வி நிறுவனத்தில் நான் எவ்வாறு சேர்வது? | Kalvimalar - News

வணக்கம். எனது பெயர் ராம் வீரப்பன். நான் தற்போது பி.காம் முடித்துள்ளேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெடிங் துறையில் 1 ஆண்டு அனுபவம் உள்ளது. எனவே, மார்க்கெடிங் பிரிவில், வெளிநாட்டில், ஒரு எம்பிஏ படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல பல்கலைகள் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கேட்கின்றனவா? அப்படியெனில், நல்ல கல்வி நிறுவனத்தில் நான் எவ்வாறு சேர்வது?ஜனவரி 19,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக, 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. பணி அனுபவம் என்பது வெறும் காலஅளவில் மதிப்பிடப்படுவதில்லை. பணி காலத்தில், உங்களின் செயல்பாடுகள், சாதனைகள், தலைமைத்துவ பண்பு, குழுஉணர்வு செயல்பாடு, சிறப்பான பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்கள் மற்றும் நீங்கள் கற்றுக்கொண்டவை போன்றவைகளே மதிப்பிடப்படும்.

இவைத்தவிர, உங்களின் மற்றொரு முக்கியத் தகுதி ஜிமேட் மதிப்பெண்கள். சிறந்த பணி அனுபவம் மற்றும் சிறந்த மதிப்பெண்கள் ஆகிய தகுதிகள் உங்களுக்கு இருந்தால், நல்ல கல்வி நிறுவனத்தில் இடம்பெறுவதில் சிக்கல் இல்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us