‘பிசினல் ஸ்கூல் குறித்த விழிப்புணர்வு தேவை’ | Kalvimalar - News

‘பிசினல் ஸ்கூல் குறித்த விழிப்புணர்வு தேவை’

எழுத்தின் அளவு :

கேலக்ஸி மேலாண்மை கல்வி நிறுவன தலைவர் ரமேஷ் பிரபா அளித்த பேட்டி:

இளநிலை பட்டப்படிப்பு படித்து வேலைக்கு சென்றவர்கள் பொதுவாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முதுநிலை படிந்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்று நினைக்கின்றனர். அதிலும் மேலாண்மை படித்திருக்காலமே என்ற உணர்வு தான், ‘கேட்’ தேர்வு எழுதி பி-ஸ்கூல்களில் சேர்க்கை பெற அவர்களை தூண்டுகிறது. இளநிலை பட்டப்படிப்பு முடித்தவுடனேயே இதை உணர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!

பிசினல் ஸ்கூல்ஸ்-ன் முக்கியத்துவம்

பொறியியல், கலை, அறிவியல் என எந்த துறையில் பட்டப்படிப்பு படித்தவர்களாலும் சேரமுடியும் என்பது மேலாண்மை படிப்பின் முக்கிய சிறப்பம்சம். மேலாண்மை படிப்பை, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளும் வழங்குகின்றன. அங்கு வழங்கப்படும் மேலாண்மை படிப்பிற்கும், பிசினஸ் ஸ்கூல்களில் வழங்கப்படும் மேலாண்மைப் படிப்பிற்கும் தரத்தில் அதிக வித்தியாசம் உண்டு. மேலாண்மை படிப்பிற்கு என்றே செயல்படும் பிரத்யேக கல்வி நிறுவனங்களான பி-ஸ்கூல்ஸ்களில் படிப்பதே சிறந்தது. இது குறித்து தமிழக மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

எம்.பி.ஏ., / பி.ஜி.டி.எம்.,

முதுநிலை மேலாண்மை படிப்பு பொதுவாக, எம்.பி.ஏ., மற்றும் பி.ஜி.டி.எம்., என இரண்டு பெயர்களில் வழங்கப்படுகிறது. பி.ஜி.டி.எம்., படிப்பு எம்.பி.ஏ., படிப்புக்கு நிகரானது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பி.ஜி.டி.எம்., படித்தவர்களும் பி.எச்டி., படிக்க முடியும். மாணவர்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கள் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., ஆகிய இரண்டு படிப்புகளும் வழங்கப்படுகின்றன. வங்கி, காப்பீடு மற்றும் மீடியா துறையில் மேலாண்மை படித்தவர்களுக்கு அமோக வரவேற்பு உள்ளதை கருத்தில்கொண்டு, அந்த துறைகளிலேயே மேலாண்மைப் படிப்பு அளிக்கப்படுகிறது. இவைதவிர, 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பி.ஜி.சி.எம்., என்ற சான்றிதழ் படிப்பும் வழங்கப்படுகிறது. வேலைக்கு செல்பவர்கள் பயன்பெறும் வகையில் வார இறுதி நாட்கள் அல்லது மாலை நேரங்களில் மேலாண்மை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மேலாண்மை பல்கலைக்கழகம்

நவீன தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த கல்வி நிறுவனமாக திகழ்கிறது. ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகள், மொழி ஆய்வகம், நூலகம், உடற்பயிற்சி கூடம், இருபாலருக்கும் தனித்தனி விடுதிகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தொழில் நிபுணர்கள் நேரடியாக மாணவ, மாணவிகளிடம் தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்கின்றனர். தொழில் நிறுவனங்களுக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். குழு செயல்பாடு, தலைமைப் பண்பு, சுயதொழில் ஈடுபாடு போன்ற திறன்கள் வளர்க்கவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலாண்மைக்கு என்று இதுவரை ஒரு பல்கலைக்கழகம் கூட இந்தியாவில் இல்லை. கேலக்ஸி கல்வி நிறுவனத்தை எதிர்காலத்தில் ஒரு மேலாண்மைப் பல்கலைக்கழகமாக உருவாக்குவது எனது குறிக்கோள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us