லீலாஸ்ரீநிதி (ஐ.சி.எஸ்.இ., தேர்வில் மாநில முதலிடம்) - 2012 | Kalvimalar - News

லீலாஸ்ரீநிதி (ஐ.சி.எஸ்.இ., தேர்வில் மாநில முதலிடம்) - 2012

எழுத்தின் அளவு :

மதுரை: மத்திய அரசு பாடத்திட்டமான ஐ.சி.எஸ்.இ., (இந்தியன் சர்டிபிகேட் பார் செகண்டரி எஜூகேஷன்) தேர்வில் மதுரை வீரபாஞ்சான் லட்சுமி பள்ளி மாணவி ப.மீ.லீலாஸ்ரீநிதி, மாநில அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

மதுரை அப்பல்லோ மருத்துவமனை நுரையீரல் நோய் நிபுணர் எம்.பழனியப்பன், காது, மூக்கு, தொண்டை நிபுணர் மீனா பிரியதர்ஷினியின் மகள் ப.மீ.லீலாஸ்ரீநிதி, 700க்கு 682 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அவரது மதிப்பெண்கள்: தமிழ் - 95, ஆங்கிலம் - 95, கணிதம் - 99, அறிவியல் - 96, சமூகவியல் - 97, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 100, சூழ்நிலையியல் - 100.

அவர் கூறியதாவது: மாநில ரேங்க் பெற, மாணவியரிடம் ஆரோக்கியமான போட்டி இருந்ததே காரணம். என் பெற்றோரும் பெரும் உதவியாக இருந்தனர். மாணவியருடன் குரூப் ஸ்டடியாக படித்து, பாட சந்தேகங்களை நிவர்த்தி செய்தேன். பள்ளியிலும் அவரவர் திறனுக்கேற்ப படிக்க ஊக்குவித்தனர். பிரஷர் எதுவும் செய்ததில்லை. இதனால், இயல்பாக படிக்க முடிந்தது.

மேலும் தேர்வுகளை, பொதுத் தேர்வின் அடிப்படையில் வினாக்கள் தந்து, திருத்தம் செய்து, அர்ப்பணிப்புடன் ஆசிரியர்கள் கற்பித்ததால் சாதிக்க முடிந்தது. மாணவர்கள் தேர்வு நேரத்தில் மன அழுத்தமின்றி, டிவி, மொபைல் போனைத் தவிர்த்து, புரிந்து படித்தால் சாதிக்கலாம் என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us